Saturday, October 11, 2008

ஐக்கிய நாடுகள் சபை


அமைவு:

ஐக்கிய அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா.வின் தலைமச் செயலகத்தில் 191 நாடுகள் கூடி உலகப் பிரச்சனைகளை
ஆராய்ந்து அவற்றுக்கு சுமுகமான முடிவுகளை எட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மனித உரிமைகளுக்கு உலகெங்கிலும் ஏற்படும் சவால்களைச் சமாளிக்கும் நடுவமாக ஐ.நா. சபை பணியாற்றி வருகிறது.

பணிகள்:

இப்பணியில் 30க்கும் மேற்பட்ட இணை நிறுவனங்களினை இச் சபை கொண்டு இயங்குகின்றது. இவை எல்லாவற்றினையும் சேர்து ஐ.நா. இயங்கு முறை வடிவமைக்கப் பட்டுள்ளது. ஐ.நா.வும் அதன் குடும்பத்திலுள்ள நிறுவனங்களும் சேர்ந்து நாளும் பொழுதும் மனிதஉரிமைகளைப் பாதுகாக்கவும், அதனை வளர்க்கவும், சுற்றுச் சூழலினை பாதுகாப்பதிலும், நோய்களுக்கெதிராகவும் வறுமைக்கெதிராகவும் செயற்படுவதிலும் ஈடுபட்டு வருகின்றன.

ஐ.நா. அமைப்புகள் பாதுகாப்பானதும் திறனுடையதுமாகிய வான்வழி போக்குவரத்துக்களிற்கான நியமங்களினை வடிவமைத்தும் தொலைத்தொடர்புகளை மேம்படுத்துவதில் உதவிகள் புரிந்தும், நுகர்வோர் பாதுகாப்பினை உறுத்திப்படுத்தியும் வருகின்றன. ஐக்கிய நாடுகள் சர்வதேச போதைப்பொருட் கடத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கெதிரான செயற்பாடுகளை முன்நின்று செயற்படுத்தி வருகின்றது.

உலகம் முழுவதிலும் ஐ.நா.வும் அதன் இணை நிறுவனங்களும் சேர்ந்து அகதிகளுக்கு உதவி புரிவதிலும், கண்ணி வெடிகளை அப்புறப்படுத்துவதிலும் ஈடுபடுவதோடல்லாது உணவுப் பொருள் உற்பத்திகளை வளர்ப்பதிலும் எய்ட்ஸ் நோய்கெதிரான செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவருகின்றன.

வரலாறு:

ஐக்கிய நாடுகள்” என்ற பதம் ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக 1940 களில் இருந்த பிராங்லின் டி. ரூஸ்வெல்ற் என்பவரால் முதன் முறையாக இரண்டாம் உலகப் போரின் போது, யனவரி முதலாம் திகதி 1942 ஆம் ஆண்டில் “ஐக்கிய நாடுகளின் அங்குரார்ப்பணத்தில்”வைத்து 26 சேர்ந்து தீவிரவாத சக்திகளுக்கெதிராகப் போராடும் உறுதியினை எடுத்து கொண்ட போது உபயோகிக்கப்பட்டது. எனினும் அச் சமயத்தில் ஐ.நா. ஒரு போர் கால கூட்டணியாகவே இருந்தது.

1865இல் சர்வதேச தந்தி நிறுவனம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட சர்வதேச தொலைத்தொடர்புகள் ஒன்றியமும், 1874 இல் உருவாக்கப்பட்ட தபால் ஒன்றியமும் தற்போது ஐக்கிய நாடுகளின் நிபுணத்துவ நிறுவனங்களாக இருந்து வருகின்றன.

பின்னர் ஐ.நா. வானது வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோ நகரில் வைத்து ஓர் அனைத்துலக நிறுவனமாகத் தொடங்கப்பட்டது. எனினும், 51 பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10 1946 இல், இலண்டனிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் மத்திய மண்டபத்தில் கூடியது.

1919 இலிருந்து 1946 வரை, இதற்கு முன்னோடியாகக் கொள்ளக்கூடிய, இதையொத்த League of Nations என்னும் நிறுவனம் இருந்து வந்தது.

ஐ.நா. அங்கத்தினர் தகுதி, ஐநா சாசனத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்று, அந்நிபந்தனைகளை செயல்படுத்த முடியும் என ஐநாவினால் நம்பத்தகுந்த எல்லா ”சமாதான விரும்பி” நாடுகளுக்கும் உண்டு. பாதுகாப்புச் சபையின் பரிந்துரைப்படி, பொதுச்சபை அனுமதி பற்றித் தீர்மானம் எடுக்கிறது. வருடாவருடம் ஒக்டோபர் 24ஆம் திகதியில் ஐக்கிய நாடுகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஐக்கிய நாடுகள் முறைமை:

ஐக்கிய நாடுகள் முறைமை 5 முக்கிய அமைப்புகளைக் உள்ளடக்கியது. அவையாவன:

* ஐக்கிய நாடுகள் பொதுச் சபை
* ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை
* ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை
* ஐக்கிய நாடுகள் நம்பிக்கைப் பொறுப்புச் சபை
* ஐக்கிய நாடுகள் செயலகம்
* அனைத்துலக நீதிமன்றம்

ஆதாரம்:
1. htttp://www.un.org
2. http://ta.wikipedia.org

Friday, October 10, 2008

இனவாதமும் சுயநிர்ணயமும்


திட்டமிட்ட நிலப்பறியுடன் கூடிய நிலப்பகிர்வு விவசாயிகளின் நிலப்பிரச்சனைக்கு தீர்வை வழங்கியது. இது இலங்கையில் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான தேசியப் போராட்டத்தை பின்தள்ளியது. நிலப்பிரபுத்துவ வர்க்கம் இழப்பீடுயின்றி அரைகாலனிய அரைநிலப்பிரத்துவ வடிவத்தை தொடரும் வகையில் திட்டமிட்ட இனவாத நிலப்பகிர்வை ஒரு கண்ணியாகியது. ஜனநாயகக் கோரிக்கை உள்ளடக்கிய தேசிய போராட்டத்தை இது பின் தள்ளியது. இதை மார்க்சியவாதிகள் இலங்கை வரலாற்றில் சரியாக அடையாளம் காணவில்லை. திட்டமிட்ட இன அழிப்பிலான நிலப்பகிர்வு வர்க்க போராட்டத்துக்கு எதிராக இருப்பதை அடையாளம் காணத்தவறியது, இலங்கையில் வர்க்கப் போராட்த்தின் பின்னடைவுக்கு வழி சமைத்து.

அத்துடன் கல்வியில் இனவாத அடிப்படையிலான தரப்படுத்தல், இனவாத அடிப்படையிலான வேலைவாய்ப்பு கூட இனங்களை பிளந்து நடத்தியதன் மூலம், வர்க்கப் போராட்த்தை பின் தள்ளமுடிந்தது. வரலாற்று ரீதியாக ஆளும் வர்க்கங்கள் இனங்களைப் பிளந்ததன் மூலமும், சமூக லாபங்களை ஒரு இனம் சார்ந்து மாற்றியதன் மூலமும் வர்க்கப் போராட்த்தை இனவாத சேற்றில் மூழ்கடித்தனர். உண்மையில் இனவாதம் சார்ந்து நடத்திய வர்க்க ஆட்சியை எதிர்த்து போராட வேண்டிய மார்க்சிய கட்சிகள், இனவாத சேற்றை தமக்கு அப்பியதன் மூலம் அதன் சேற்றில் மூழ்கினர். உண்மையில் வர்க்கப் போராட்டம் இந்த இனவாத நடவடிக்கைக்கு எதிராக நடத்தப்பட்டிருக்க வேண்டும்;. ஆனால் அது நடத்தப்படவேயில்லை. இதை மார்க்சியத்துக்கு அன்னியமான விடையமாக காட்டிதயன் மூலம், இனவாத்தை கொழுவேற்றவதில் துணைநின்றனர் என்றால் மிகையாகது.

மறுதளத்தில் தேசம், தேசியம் என்பதை வெறும் தமிழன் சிங்களவன் ஆட்சியாக சித்தரிப்பது நிகழ்கின்றது. இதில் இருந்து தமிழன் அல்லது சிங்களவனை எதிர்ப்பதை தேசியமாக காட்டுவது நிகழ்கின்றது. இந்த இனம் கடந்து இலங்கையின் பொதுவான இனவாதமாக உள்ளது. ஒரு தேசம் என்பது, அந்த தேசம் தனது உள்சுற்று சந்தை வடிவத்தில் நிர்மானமாகின்றது என்பதை, இனத் தேசியம் மறுக்கின்றது தனது சொந்த தேசிய பொருளாதாரத்தை அன்னிய ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக கட்டமைக்காத தேசியம், உண்மையில் ஒரு தேசமாகவோ தேசியமாகவோ இருப்பதில்லை. இதை இன குறுந் தேசிய வாதிகளும், தேசிய எதிர்ப்பாளர்களும் ஒரேவிதமாக மறுக்கின்றனர். ஏகாதிபத்தியம் கட்டமைக்கும் தனது பொருளாதார அமைப்புக்குள், தேசங்களையும் தேசியங்களையும் உட் செரித்து மறுகாலனியாக மாற்றும் பொதுவான தன்மைக்குள் தேசிய போராட்டங்களும் தேசிய அரசுகளும் அடிமையாகின்றன. இதையே இன்றைய தமிழ் தேசியமும், சிங்கள தேசியமும் விதிவிலக்கின்றி செய்கின்றனர். இதையே தேசிய எதிர்ப்பாளார்களும் செய்கின்றனர். சுயநிர்ணயம் என்பது அடிப்படையான பொருளாதார கட்டமைப்பை மறுக்கும் தேசியமாக விளக்குவது, இன்றைய நவீன தேசிய திரிபாகும். இது உலகமயமாதல் கோட்பாட்டில் தொங்குவதாகும்.

சிறீலங்காவின் வருமானத்தைவிட கடன் தொகை அதிகரிப்பு - சர்வதேச நாணய நிதியம்

சிறீலங்காவின் கடன் தொகை வருமானத்தை விட அதிகரித்துச் செல்வதாகவும் சிறீலங்கா அரசாங்கத்தால் நாளாந்த செலவீனங்களை பூர்த்திசெய்ய கூடியளவுக்கு வருமானத்தை ஈட்டமுடியாதுள்ளதாகவும் சர்வதேச நாணயநிதியம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிறீலங்காவின் முதலீட்டு உருவாக்கம் இப்பிராந்தியத்திலேயே மிகக்குறைவாக உள்ளதாகவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவின் மொத்த உள்ளுர் உற்பத்தியின் 101 வீதம் கடன் உள்ளதாகவும் கடந்த ஜந்து வருடத்தில் இப்பிரதேசத்தின் கடன்தொகை வீதத்தினை மிஞ்சியுள்ளதாகவும் நேபாளத்தில் இது 63 வீதமும், பங்களதேசில் 49 வீதமும் இந்தியாவில் 85 வீதமம் ஆக காணப்படுவதாகவும் தெரியவருகிறது.

2004 ம் ஆண்டு சுனாமி தாக்கத்தின் பின் 2006 ம் ஆண்டு சிறீலங்காவின் வளர்ச்சிவீதம் 7.4 வீதமாக காணப்பட்டதாகவும் இது 2007 ம் ஆண்டு முதல் அரையாண்டுப்பகுதியில் 6.2 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, October 7, 2008

வாழ்வின் அழிவுக்கு எலும்புகள் காரணமாவதை தடுப்பது எப்படி


ஒஸ்ரியோபொரோஸிஸ் ஏற்படுத்தும் பின் விளைவுகள்:

ஒஸ்ரியோபொரோஸிஸ் உள்ளவர்கள் ஒரு சிறு காயத்தின் பின்னர் ஒரு எலும்பை உடைத்துக் கொள்வது சாதாரணமானது. இடுப்பு, மணிக்கட்டு, முள்ளந்தண்டு ஆகியவற்றில் முறிவுகள் ஏற்படலாம். இடுப்பு, மணிக்கட்டில் முறிவுகள் விழுவதனால் ஏற்படுகின்றன.

முள்ளந்தண்டின் எலும்புகள் பலவீனமுற்ற நிலையில் ஒன்றுடன் ஒன்று நெருக்கப்படுவதால் முறிவடையக் கூடும். துண்டங்கள் நெருக்குப்படும் போது முள்ளந்தண்டு வளைவடையும். இதனால் நோ ஏற்படுவதுடன் உயரத்தில் குறைவும் ஏற்படும். சிலருக்கு சுவாசிப்பதில் சிக்கலும் ஏற்படும். ஒஸ்ரியோ பொரோசசிஸ்சிற்கான சிகிச்சை சாதாரணமாக எலும்புகளின் உடைவுக்கு காரணமாயிருக்கக் கூடிய கலங்களின் செயற்பாடுகளை தடை செய்வதற்கான மருந்து வகைகள் இதற்கெனக் கொடுக்கப்படுகின்றன. இதனால் எலும்புப் பொருண்மை அதிகரிக்கும். எலும்புகள் வலுப்பெறும். முறிவடையும் ஆபத்துக்கள் குறைவடையும். முதல் வருடச் சிகிச்சையினுள் புதிதான முள்ளந்தண்டு முறிவுகள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் 60 70% தினால் குறைவடைகின்றது. போதியளவு கல்சியமும் விற்றமின் "டீ' யும் எடுத்தல் சிபாரிசு செய்யப்படுகிறது.

எனக்கு ஒஸரியோபொரோஸிஸ் இருப்பதாக காணப்படுமிடத்து நான் என்ன செய்தல் வேண்டும்?

பணிக்கப்பட்ட விதத்தில் சிகிச்சையை மேற்கொள்ளவும் மிகச் சிறந்த பெறுபேறுகளுக்காக சிகிச்சையை பல வருடங்களுக்குத் தொடர வேண்டியிருக்கும். உணவு:

உணவும் அதில் இருக்கக் கூடிய கல்சியத்தின் அளவும் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். தினமும் 1500 மி.கி. கல்சியம் அவசியமாகும். பாலுணவு வகையில் கல்சியம் நிறைவாக உள்ளது. ஏதேனுமொரு கல்சிய உணவை எடுக்கவும் வாத நோயியல் மருத்துவரை நாடவும்

வெய்யிலை பயன்படுத்தவும்

விற்றமின் "டீ' கல்சியம் குடலினால் உள்ளுறுஞ்சப்படும் வேகத்தை அதிகரிக்கும் என்பதால் முக்கியமானது தினமும் வெய்யிலில் உலõவுங்கள். அவ்வாறில்லையேல் உங்கள் உணவில் விற்றமின் "டீ' யை சேர்க்கும்படி வாத நோய் மருத்துவர் அறிவுறுத்துவார். (மீன் எண்ணெய் குளிசை)தினமும் உடற்பயிற்சி கவனத்துடன்:

முள்ளந்தண்டில் திடீர் அழுத்தங்கள் ஏற்பட்டு முறிவுகள் ஏற்பட அனுமதித்தலானது. பாரம் தூக்குதல், முன்புறமாக குனிதல் என்பனவற்றை தவிர்க்கவும்.

*படுக்கையின் போது முழங்காலில் நின்று, குந்தியிருந்து படுத்தல் வேண்டும்.

*தரையிலிருந்து எதனையாவது எடுக்கும்போது முதுகுப் பக்கம் நேராக இருக்கும்படி முழங் கால்களை மடித்து எடுக்கவும். *பாரமான பொருட்கள், சூட்கேஸ் போன்றவற்றை காவுதல் ஆகாது.*திடீரென அசைவுகளை ஏற்படுத்துதல் ஆகாது. வீழ்தலுக்கான ஏது நிலையை குறைத்தல் நாம் முதியவர்களாக ஆகும் போது நிலத்தில் வீழ்தலுக்கான ஏது நிலையும் அதிகமாகும். வீழ்தலை ஏற்படுத்தக் கூடிய பொருட்களை இனங்கண்டு அவற்றை சரியான இடத்தில் வைத்தல் வேண்டும்.*கண்பார்வையை சரி செய்தல் வேண்டும். *நடத்தல், சமனிலை பேணல் ஆகியவற்றில் பிரச்சினைகளை தவிர்த்தல். (உடம்பு பிடித்தல்/ ஊன்றுதடி)*மதுபானத்தின் அளவை எல்லைப்படுத்துதல். *இருக்கை நிலைகளை திடீரென மாற்றுதலாகாது.

*நடந்து திரியும் பகுதிகளில் தடங்கல்கள் இருத்தலாகாது.*வாயிற்படி/ கதவடி நில விரிப்புகளில் கவனம் செலுத்தவும். *மின் வெளிச்சத்தை வேண்டிய இடங்களில் வேண்டிய அளவுக்கு வைத்திருக்கவும், சுவிச்சுகளுக்கு பொருத்தமான இடங்களை முடிவு செய்யவும். *தளபாடங்களின் உயரத்தை சரி செய்யவும் (கட்டில் நாற்காலி/ மலசல கூட ஆசனம் என்பன) *புகைப்பிடித்தலை நிறுத்தவும் புகைத்தல் ஒஸ்ரி÷õ பொரோசஸ் வாய்ப்புக்களை அதிகரிக்கும். பிந்திய நிலையிலும் முந்துவது நல்லதே!

சுறுசுறுப்பான வாழ்வை நடத்துதலும் கல்சியம் நிறைந்த உணவை உண்பதும் ஒஸ்ரியோபொரோஸஸ் பிணியை தடுக்க உதவும். சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்த எவ்வளவுக்கு முந்துகிறோமோ அந்தளவுக்கு முறிவுகள் ஏற்படக்கூடிய ஏது நிலையினின்றும் எம்மைக் காத்துக் கொள்கின்றோம். (கட்டுரையாளர் ஸ்ரீ ஜயவர்த்தன வைத்தியசாலையின் வாத நோயியல் ஆலோசகராவர்)

கல்வியில் பால்நிலை

பால்நிலை என்றால் என்ன?

மனிதர்கள் தங்கள் இனப்பெருக்கத் தேவைகளின் காரணமாக ஆண்கள் என்றும் பெண்கள் என்றும் உயிரியல் ரீதியான வேறுபாடுகளுடன் படைக்கப்பட்டிருப்பதை நாம் பால் என்னும் பதத்தினால் குறிப்பிடுவோம். பால் என்பது மனிதர்களுக்கு மட்டுமன்றி மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் பொருந்துவதாகும். அனேக உயிரினங்களுக்கு மத்தியிலும் ஆண் உயிரினம்; பெண் உயிரினம் எனப் பால் வேறுபாடுகளுள்ள இனங்கள் உண்டு.

ஆயின், பால்நிலை என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூகத்தினால் விதிக்கப்படும் குண இயல்புகளும் அவை தொடர்பான பாத்திரங்களுமாகும். “பால் சமூகத்தில் வகிக்கின்ற நிலை” பால்நிலை என்று பொருள் கொள்ளலாம். சமூகமய மாக்கலினால் உருவாதலினால் பால்நிலை என்பது மனிதர்கள் மத்தியிலே மட்டும்தான் காணப்படுகின்றது. ஆண்கள் வீரமுள்ளவர்கள், தைரியசாலிகள், அறிவு பூர்வமானவர்கள் என்பதனால் நாட்டுக்கும் வீட்டுக்கும் அவர்கள் தலைவர்களாக வருவது பொருத்தமாகும் என்று தற்சமயம் நிலவும் பால்நிலைக் கோட்பாடு; கருதுகின்றது. அதே போன்று பெண்கள் மென்மையான சுபாவம் உடையவர்கள், அழகானவர்கள், நாணம் கொண்டவர்கள், இலகுவாக அச்சமடைவார்கள், உணர்ச்சிவசப்படுபவர்கள், கற்பு உடையவர்களாக இருக்க வேண்டியவர்கள், சிந்திக்கும் ஆற்றல் குறைந்தவர்கள் என்று இக்கோட்பாடு எடுத்தியம்புகின்றது.


ஆறுதலாக இருந்து பால்நிலை ஆணுக்கும் பெண்ணுக்கும் விதிக்கும் குணாதிசயங்களை ஆராய்ந்து பார்த்தோமானால், அவையெல்லாமே ஆண்களுக்குக் கீழே அடங்கி வாழ்ந்து அவர்களின் வெவ்வேறு உடல் தேவைகளைத் தீர்த்து வைக்கவும் அவர்களுக்கேயுரிய வாரிசுகளைப் பெற்றுக் கொடுக்கவும் உகந்தவர்களாகப் பெண்களைஉருவாக்குவதே அதன் நோக்கம் என்பதை உணரலாம். அழகு, அடக்கம், கற்பு, வீட்டுக்குரியவள் போன்ற கருத்துக்களெல்லாம் இதனை விளக்குகின்றது.

பால் என்கின்ற உயிரியல் வேறுபாட்டிற்கும் பால்நிலைக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றனவாயினும் உயிரியல் இயல்புகளுக்கு சற்றும் பொருந்தாத வகையிலும் பால்நிலை உருவாக்கப்படலாம். இதற்கு உதாரணமாக, தாய்மை என்பது ஒரு பெண் தனது வாழ்க்கையில் வகிக்க வேண்டிய முக்கிய பாத்திரம் என்று பொதுவாகவே சமூகம் வலியுறுத்துவதை நாம் எடுத்துக் கொள்ளலாம். இது உயிரியல் ரீதியாகவும் பெண்களுக்குப் பொருந்துவதாகும். இயற்கையும் இனப்பெருக்கத்தின் முக்கிய பங்குதாரராகப் பெண்களைப் படைத்ததனால் பெண்களின் உடல் அங்கங்களையும் வாழ்க்கை வட்டத்தினையும் அதை மையப்படுத்தியே உருவாக்கியிருப்பதை நாம் காணலாம். இங்கு பால்நிலை என்பது பால் என்பதடன் பொருந்துகின்றது.

ஆனால் அதே சமயத்தில், கணவன் ஒருவனால்தான் பெண்ணுக்கு வாழ்வு கிட்டுகின்றது என்று பால்நிலைக் கோட்பாடானது பெண்ணின் பாத்திரத்தினை ஒரு ஆணின் மீது தங்கி நிற்கும் பாத்திரமாகச் சித்தரிக்கின்றது. ஆனால் உயிரியல் ரீதியாக, ஒரு பெண் ஆணின் மீது தங்கி நிற்கவேண்டும் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லையாகும். இனப் பெருக்கத்தில் கருக்கட்டலில் மட்டும்தான் ஒரு ஆண் பங்கு வகிக்கின்றான். அதன் பின் குழந்தையைப் பெற்று வளர்ப்பதிலெல்லாம் இயற்கை ஒரு மனித ஆணுக்கு எந்தவிதமான பாத்திரத்தினையும் வழங்கவில்லை யென்பதே உண்மையாகும்.

இதற்கு மாறாக, தூக்கணாங்குருவி போன்ற சில பறவை இனங்களை எடுத்துக் கொண்டால், கூடு கட்டுவதிலிருந்து குஞ்சுகளைப் பராமரிக்கும் வரையில் அந்த ஆண் பறவைகள் இயற்கையாகவே பெரும்பங்கு வகிக்கின்றன. எனவே, மனிதர்களைப் பொறுத்தவரையில் இது முற்று முழுதாக சமூகத்தினால் உருவகப்படுத்தப்பட்ட பாத்திரம் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

பால்நிலை உருவாக்கப்பட்டதன் காரணம் என்ன?

மனித சமுதாயத்தை முன்னோக்கித் தள்ளுவதற்கு இரண்டு வகையான நடவடிக்கைகள் வேண்டும். ஒன்று உற்பத்தி, மற்றது இனப்பெருக்கம் (உற்பத்தி, மீளுற்பத்தி என மார்க்சியவாதம் இதனை விளக்குகின்றது). இது இரண்டும் நடந்தால்தான் மனிதர்கள் தங்கள் உடலின் அடிப்படைத் தேவைகளைக் கவனித்துக் கொண்டு தமது இனத்தையும் தொடர்ந்து இந்தப் பூமியில் தக்கவைத்துக் கொள்ளலாம்.

இந்த இரு அம்சங்களையும் ஒழுங்குபடுத்துவதுதான் சமூகமயமாக்கலின் நோக்கமாகும். அந்த ஒழுங்கின் வழியேதான் ஒவ்வொரு விதமான சமூகங்களும் தோன்றின. தவிரவும் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் மனித சமுதாயத்தின் உற்பத்தி ஒழுங்குமுறையும் மீளுற்பத்தி ஒழுங்கமைக்கப்பட்ட முறையும் மாறுபாடடைந்து வந்திருக்கின்றது. பார்க்கப்போனால், உற்பத்தி எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டதோ அதற்கு ஏற்ற முறையில்தான் மீளுற்பத்தி ஒழுங்கமைக்கப்பட்டது. உற்பத்தி ஒழுங்கமைக்கப்படும் முறை பொருளாதாரக் கட்டமைப்பாக இருக்க, மீளுற்பத்தி ஒழுங்கமைக்கப்பட்ட முறை அக்காலத்தின் பால்நிலை உறவுகளாயின.

இதை மேலும் விளக்குவதற்கு ஒவ்வொரு காலத்திலும் மனிதகுலம் உற்பத்தியை ஒழுங்கமைத்த முறையையும் அதற்கேற்ற மீளுற்பத்தி தன்னை ஒழுங்கமைத்த முறையையும் நாம்உதாரணங்களினூடாகப் பாக்கலாம். ஆதியில் பொதுவுடைமை வழங்கியிருந்த காலம். கூட்டுற்பத்தி முறைகளும் அதைக் கொண்ட நடத்தத் தேவையான கூட்டுக் குடும்ப முறைகளும் பரவியிருந்தன. இந்தக் காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு சமமாக உற்பத்தியில் ஈடுபட்டிருந்தது மட்டுமன்றி ஒரு தார மணம் என்பது தெரியாத காலமாகவும் இருந்தது. எனவே, கற்பு போன்ற நாம் இன்று பெண்களுக்கேயுரியது என்று அறிந்திருக்கின்ற பண்புகளை மனிதகுலம் அன்று அறிந்திருக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.

இக்காலகட்டத்திற்குப் பின்னர், தனியுடைமை தோன்றியது. ஆண்கள் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பில்லாதவர்களாக நடமாடித் திரியும் சுதந்திரம் பெற்றதனாலே தனியுடைமை அமைப்பின் கீழ் அவாகள் சொத்துக்களை உழைக்கும் வசதி பெற்றவர்களாக மாறினார்கள். சமூகத்தில் அவர்கள் ஆதிக்கமும் ஓங்கியது. தாம் சேர்த்த சொத்துக்களுக்கான வாரிசுகளைத் தரும் கருவிகளாக பெண்களை உபயோகிக்க ஆரம்பித்தார்கள். இதனால், தனியுடைமையுடன் ஒருதார மணமும் தோன்றியது. ஒரு தாரமணத்துடன் பெண்கள் சமூகத்தில் தாம் வகித்த உயரிய அந்தஸ்தினை இழந்தனர்.

ஆண்டான் - அடிமை உறவு கொண்ட சமூகம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், உலகமயமாக்கம் என உலகின் பொருளாதாரக் கட்டமைப்பு மாறி வந்திருக்கின்றது. இந்த ஒவ்வொரு பொருளாதாரக் கட்டமைப்பிற்கும் ஏற்றது போல ஆண்களினதும் பெண்களினதும் சமூகப் பாத்திரங்கள் மாற்றமடைந்து வந்திருக்கின்றன. எங்கு பெண்கள் பொருளாதார உற்பத்தியில் பெரும் பங்கு வகித்தார்களோ அங்கெல்லாம் அவர்களின் நிலை சற்று உயர்ந்த அந்தஸ்து உடையதாக இருந்ததைக் காணலாம்.

பால்நிலை உறவுகள் எவ்வாறு தக்கவைத்துக் கொள்ளப்படுகின்றன?

பால்நிலை என்பது இயற்கையால் அல்ல மனிதர்களால்உருவாக்கப்பட்டது என்பதனால் அதனைக் காலம் காலமாக தக்கவைத்துக் கொள்வதற்கு மனிதர்கள் பெரும் பிரயாசைகளை எடுக்க வேண்டியிருந்தது. ஒரு சந்ததியினருக்கு ஒரு முறை மூளைச்சலவை செய்தால் போதாதே. ஒருவருடைய வாழ்நாளில் அவர் என்றும் மாறாதிருக்க தொடர்ந்து செய்யப்படவேண்டும் என்பதுடன், அவ்வாறே ஒவ்வொரு சந்ததியினருக்கும் செய்து கொண்டு வரப்பட வேண்டும்.

இதற்காக மதக் கோட்பாடுகளையும் சம்பிரதாயச் சடங்குகளையும் உருவாக்கினார்கள். இவற்றின் மூலம், இந்த உலகத்தில் நிலவும் பால்நிலை உறவுகள் கடவுளால் ஏற்படுத்தப்பட்டது என நிலைநாட்டினர். சிறு வயது முதல் ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் வளர்க்கும் முறைகளில் இத்தகைய உறவுகளை வலியுறுத்தினர். பெண்கள் தங்கள் நிலையை மாற்றுவதற்கான ஆற்றல்களை தம்முள் வளர்த்தெடுத்துக் கொள்ளும் சகல வாய்ப்புக்களும் அவர்களுக்கு நிராகரிக்கப்பட்டன. உதாரணமாகக் கல்வி அவர்களுக்குப் பல காலமாக நிராகரிக்கப்பட்டு வந்தது. நடமாடும் சுதந்திரம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டு வெளியுலகம் தெரியாதவர்களாக வளர்க்கப்பட்டார்கள். அரசியலில் பங்குபற்றும் உரிமை மறுக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஜனநாயகம் தோன்றிய நாடுகள் பலவற்றில் அங்கிருந்த அடிமைச் சமூகம் போலவே பெண்களையும் பிரஜைகள் என்றுகூட அந்த அரசுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

பெண்களுக்கு மூளை என்ற அங்கம் இல்லை என்றுகூட சாதித்த விஞ்ஞான ஆய்வுகள் ஆண்களினால் செய்யப்பட்டன. யாரும் ஒரு பெண் ஒரு கொஞ்சம் வேறுபாடான நடத்தையைக் கொண்டாளாயின் ஈவிரக்கமின்றி அவள் கொலை செய்யப்பட்டாள். கல்லெறிந்து கொல்லப்படுகின்றதும் உயிருடன் கட்டி வைத்து தீ மூட்டப்படுவதும் பெண்களுக்கு இன்றுவரை இழைக்கப்படும் கொடுமைகளில் ஒரு சிலவாகும். இன்றோ, பெண்களுக்கும் ஆண்களுக்கும் மூளைச் சலவை செய்யும் இதே வேலையை வேறு உருவில் எமது ஊடகங்களும், கல்விக் கோட்பாடுகளும் செய்து வருகின்றன.

இவ்வாறு, பரம்பரை பரம்பரையாகச் செயற்படுத்திய சமூகமயமாக்கலின் விளைவாகத்தான் பெண்கள் நாம் இன்று பார்க்கும் பெண்களாக உருவாகியிருக்கின்றனர், ஆண்கள் நாம் இன்று பார்க்கும் ஆண்களாக இருக்கின்றனர். சமூக வழக்கங்கள் ஆண்களையும் பெண்களையும் உருவாக்க, அந்த ஆண்களும் பெண்களும் திரும்ப சமூக வழக்கங்களை உருவாக்குகின்றனர். இந்த வகையில்தான் பால்நிலை உறவுகள் தக்கவைத்துக் கொள்ளப்படுகின்றன.

நாம் இன்று காணும் முறைகளில் பால்நிலை உறவுகள் நிலவுவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்ன?

பால்நிலை ஒரு சமூகத்தின் ஆண்களினதும் பெண்களினதும் பாத்திரங்களை வரையறுக்கின்றது. அவாகள் ஒரு நிலைக்கு மேலே மாறுபாடான நடத்தை கொண்டவர்களாக இருக்க முடியாதபடி குறுக்குகின்றது. இதனால் குறிப்பாக பெண்கள் தங்களது வாழ்க்கையில் பல வாய்ப்புக்களையும் வளங்களையும் இழக்கின்றனர். அவர்களுக்கு தமது சொந்த அபிலாஷைகளுக்குரியவாறு தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் தெரிவு இல்லாமல் போகின்றது. திருமணம், குடும்பம் என்பதுதான் பெண்களின் பிரதான கவனமாக இருக்கவேண்டும் என்று சமூகம் தனியே பெண்களின்மீது அந்தச் சுமையை ஏற்றுவதனால் அனேகம் பெண்கள் தங்கள் வாழ்வின் இலட்சியங்களைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டியதாக இருக்கின்றது.


இந்த உலகில் தொழிலதிபர்களாக கோடிக்கணக்கான முதலீடுகளை ஆள்பவர்களும், மதத் தலைவர்களாக ஒரு சமூகத்தின் ஆன்மீக வாழ்வைக் கட்டுப்படுத்துபவர்களும், அரசியல் உயர் தலைவர்களாக வருபவர்களும் ஆண்களாகவே இருக்கின்றனர். பெண்கள் இன்னும் அனேகமாகத் தங்கள் உழைப்பினைக் குடும்பத்திற்கும்சமூகத்திற்கும் ஓயாமல் ஒழியாமல் வழங்கும் தொழிலாளிகளாகத்தான் தொடருகின்றனர்.

ஆண்களுக்கு பெண்களளவு கட்டுப்பாடுகள் இல்லையென்றாலும், அவர்களுக்கும் பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஒரு ஆணின் கெட்டித்தனமும் இயல்பும் எப்படியிருந்தாலும் கூட அவன் உழைப்பவனாக, உத்தியோகம் பார்ப்பவனாக, வீரமுள்ளவனாக இருக்க வேண்டுமென சமூகம் எதிர்பார்த்து அழுத்தங்களைக் கொடுக்கின்றது. இது ஒரு அநீதியாகும். அதனை மனித உரிமை மீறலாகக்கூட விவரிக்கலாம். இந்த நிலை மாறி, ஒவ்வொரு மனிதரும் தமது ஆற்றல்கள், விருப்பங்களுக்கேற்ப தங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ளவும், தம்மை வெளிக்காட்டவும், சுதந்திரம் இருக்கும் நாள் வரவேண்டும்.

கல்விக்கும் பால்நிலைக்கும் என்ன தொடர்பு?

கல்வி ஒரு மனிதனை உருவாக்குகின்றது என்று சொன்னால் மிகையாகாது. இளவயது முதல் செல்வாக்குச் செலுத்தி, ஒருவரின் சிந்தனா முறைகள், கண்ணோட்டங்கள், விழுமியங்கள். ஏன், பழக்க வழக்கங்களும்கூட கல்வியினால் உருவாக்கப்படலாம். பால்நிலை உறவுகளும், ஒருவரின் சிந்தனா முறையிலும்கண்ணோட்டங்களிலும் விழுமியங்களிலும் பழக்க வழக்கங்களிலும் உணர்வுபூர்வமாக நிலவுகின்றது என்பதை நாம் முன்னர் பார்த்தோம். இதிலிருந்து பால்நிலை உறவுகளை மாற்றுவதில் கல்வித் திட்டம் ஒரு முக்கிய பங்கு வகிப்பதைப் புரிந்து கொள்ளலாம். சமூகமயமாக்கலைக்கூட மேவி, சுற்றுச் சூழலுக்கும் அப்பாற்பட்ட புதிய சிந்தனா முறைகளைத் தூண்டக்கூடிய கருவி கல்வியாகும்.

அது தவிர, நிலவும் பால்நிலை உறவுகளைத் தக்கவைத்து பலப்படுத்தும் கருவியாகவும் கல்வி தொழிற்பட்டு வந்திருக்கின்றது. எமது உலகம் எதை முக்கியமாகக் கருதி அதைப் பற்றிய அறிவுத் தேடலில் ஈடுபட்டிருக்கின்றது, ஆவணப்படுத்தியிருக்கின்றது, கற்றிருக்கின்றது என்பதை ஆராய்ந்து பார்த்தாலே அதற்குள் உள்ள பால்நிலை ஏற்றத்தாழ்வுகள் எமக்குப் புலப்படும். வுரலாற்றை எடுத்தாலும் அது ஆண்களின் வரலாறாகத்தான் இருக்கின்றது. மதபோதனைகள் எல்லாம் ஆண்களுக்கு சார்பாகவே இருக்கின்றன. விஞ்ஞானமும் பெண்களுக்கு முக்கியமான விடயங்களைப் பற்றிப் பேசுவதற்கு இன்னமும் பின்னிற்கின்றது. இந்தப் பின்னணியில், கல்வித் திட்டத்தினையே அதற்கேற்ப சீரமைக்கும் பணி நம்முன் உள்ளது.

கல்வியில் பால்நிலை பற்றிய கருத்துக்களைப் புகுத்தும் முறைகள் என்ன?

தம்மைச் சூழவுள்ள, தாம் அன்றாடம் பார்க்கும் சமூக உறவுகளை மாற்றி புதிய உறவுகளை நடைமுறைப்படுத்தக்கூடிய விழுமியங்களை மாணவர்கள் மனதில் தோற்றுவிப்பதே கல்வியில் பால்நிலை பற்றிய கருத்துக்களை உள்வாங்குவதன் நோக்கமாகும். இந்நோக்கம் இரண்டு வழிகளில் அடையப்படலாம். அவை பின்வருமாறு:

1) சமூகத்தில் தற்போது நிலவும் அசமத்துவமான பால்நிலை உறவுகள் பற்றிய விழுமியங்கள் செல்வாக்குச் செலுத்துவதைத் தடுப்பது அல்லது குறைப்பது

உபயோகிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பாடவிதானங்களிலும் பாடப் புத்தகங்களிலும் வெளிப்படையாகவோ அல்லது பூடகமாகவோ அசமத்துவமான பால்நிலை உறவுகள் காட்டப்படுமாயின், அவற்றை மாற்றுவது இந்த நடவடிக்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது பாடங்களின் உள்ளடக்கத்தை மாற்றுவது தொடங்கி ஆசிரியர்கள் கல்வியை வழங்கும் முறைமைகள் வரை சகல விடயங்களையும் கையாளும். மாற்றவேண்டிய பாட உள்ளடக்கத்திற்கான உதாரணங்களாக, பாடங்களில் வருகின்ற கதைகளில் பெண்களினதும் ஆண்களினதும் பாத்திரங்கள் சமூக மாதிரிகளாக (Stereo Typed Roles) மட்டுமே இருப்பது, உலகப் பெரியார்களின் கதைகள் தனியே ஆண் பெரியார்களின் கதைகளாக இருப்பது, வரலாறுகள் ஆண்கள் கண்ணோட்டத்திலிருந்து எழுதப்படுவது, சமூகவியல் பாடங்களில் வீட்டுவேலை போன்ற பெண்களினது தொழில்கள் பெறுமதி மிக்க தொழில்களாகக் கருதப்படாமல் குறிப்பிடப்படுவது ஆகியவற்றைக் கூறலாம்.


ஆசிரியர்கள் கல்வியை வழங்கும் முறைகளுக்கு உதாரணமாக அவர்கள் சமூக மாதிரிகளாக ஆண்களையும் பெண்களையும் உருவகப்படுத்தும் கதைகளை ஏற்றுக்கொண்டு எதுவித விமர்சனங்களும் இன்றி மாணவர்களுக்குக் கூறுதல், ‘பொம்பிளைப் பிள்ளை நீர் உமக்கு இந்த வேலை நன்றாக வரும், ஆம்பிளைப்பிள்ளை நீர் இதை நன்றாகச் செய்வீர்..’ என்ற வண்ணம் மாணவர்களுடன் பேசுவது, சமய நம்பிக்கைகள் போன்றவை அசமத்துவ பால்நிலை உறவுகளைச் சித்தரிக்கும்பொழுது அதைப் பற்றிய விளக்கங்களைத் தராமல் கற்பித்துக் கொண்டு போவது, ஆண் ஆசிரியர்களும் பெண் ஆசிரியர்களும் தாம் பாரம்பரிய வேலைப் பிரிவினைகளைத் தங்களுக்குள் எற்படுத்திக் கொண்டு மாணவர்களுக்கான முன்மாதிரிகளாக இருப்பது, போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

2) புதிய சமத்துவமான சமூக விழுமியங்களை மாணவர்கள் சிந்தனையில் உருவாக்குவது

இந்த நடவடிக்கையில் இதற்குரிய புதிய பாடவிதானங்கள் எழுதப்படவேண்டும். குறிப்பாக விடலைப் பருவத்தினருக்கு, பால்நிலை உறவுகள் தோன்றிய காரணங்கள், அவை தம்மை வெளிக்காட்டும் முறைகள், சமத்துவமானதொரு புதிய சமூகத்தின் அம்சங்களைச் சித்தரிக்கும் கதைகள், எமது சமூகத்தைப் புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு உதவும் ஒப்படைகள், ஆகியவற்றைப் போன்ற விடயங்கள் அவர்கடைய பாடாந்தரத்தில் உள்ளடக்கப்படவேண்டும்.

மேற்கூறிய நடவடிக்கைகள் ஒரு பாரிய பணியாகும். இவற்றைச் செவ்வனே செயற்படுத்துவதற்கு முதலில் அதனைச் செயற்படுத்தும் கல்வியியலாளர்களும் ஆசிரியர்களும் சமூகம் தங்களுக்குள் இதுவரைகாலமும் வளர்த்தெடுத்த தங்கள் கண்ணோட்டங்களிலிருந்தும் விழுமியங்களிலிருந்தும் தாம் விடுபடவேண்டும். சமூகத்தினின்று வேறுபட்டு தாங்கள் தனித்துவமாக நிற்கும் ஆற்றல் இந்த ஆசிரியச் சமூகத்தினருக்கு உண்டா என்பது ஒரு கேள்வியாகும். அவர்கள் இதற்கு விடை பகர்வார்களா?

Thursday, October 2, 2008

சமூகப் பராமரிப்பு நிறுவன நிதி (CEF)



சமூக நிறுவனங்கள் சமூக விவகாரங்களில் கவனம் செலுத்துகின்றன. அவை சமூக மாற்றத்தை ஏற்படுத்தத் கொழிலைப் பயன்படுத்துகின்றன. வசதி குறைந்தோர் சொந்தக்காலில் நிற்பதற்கு உதவுவதற்காக, சமூக வளர்ச்சி, இளையர், விளையாட்டு அமைச்சு அதன் சமூக நிறுவன நிதியை (SEF) சமூகப் பராமரிப்பு நிறுவன நிதியாக (CEF) மாற்றியமைக்கிறது. உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்தும் தொழில் நிறுவனங்களை ஆரம்பிப்பதற்கான தொடக்க நிதியை அது வழங்கும். அந்த உதவி, வசதி குறைந்த சிங்கப்பூரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாகவோ, ஈட்டிய ஆதாயத்தில் அவர்களுக்கான திட்டங்களைச் செயற்படுத்துவதாகவோ அமையும்.

சாத்தியப்படும் தொழில் திட்டங்களுக்கு அந்த நிதி ஒதுக்கப்படும். சமூகப் பராமரிப்பு நிறுவன நிதிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனம் தான் செய்யவிருக்கும் தொழில் தாக்குப்பிடிக்கக் கூடியது என்பதையும் அது வெறும் சமூகத் திட்டம் அல்ல என்பதையும் நிரூபிக்க வேண்டும். தொழில்கள் ஈட்டும் ஆதாயம் சமூகக் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காகச் செலவிடப்பட வேண்டும்.

சமூக நிறுவன நிதி, 2 மில்லியன் வெள்ளியுடன் இந்த நிதி ஆண்டைத் தொடக்கியது. காம்கேர் மேலும் 1 மில்லியன் வெள்ளியைச் சேர்த்து, சமூகப் பராமரிப்பு நிறுவன நிதியை இந்த ஆண்டுக்கு 3 மில்லியன் வெள்ளி ஆக்கியிருக்கிறது.

சமூகப் பராமரிப்பு நிறுவன நிதிக்கு, சமூக வளர்ச்சி, இளையர், விளையாட்டு அமைச்சிடம் 2005 ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து விண்ணப்பிக்கலாம். சமூகப் பராமரிப்பு நிறுவன நிதி பற்றிய மேல் விவரங்களுக்குத் தொடர்புகொள்ளவேண்டிய இணைய முகவரி: comcare@mcys.gov.sg.

பெண்ணியம்


பெண்ணியம் என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும். ஆண் பெண் சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கோட்பாடாகவும் இது வரையறுக்கப்படுவதுண்டு. பெண்ணியத்தை வரையறுப்பதென்பதே கூட சிக்கலானதாக இருப்பதுண்டு.
சமத்துவமின்மையின் மூலங்கள், சமத்துவத்தை அடைவதற்கான வழிமுறைகள், பால் மற்றும்
பால்நிலை அடையாளங்களை விமர்சிப்பது, கேள்விக்குட்படுத்துவதற்கான எல்லைகள் போன்றன தொடர்பில் பெண்ணியவாதிகளிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. பால் அடையாளங்களான ஆண் - பெண் போன்றவை வெறுமனே சமூகத்தால் கட்டமைக்கப்பட்டவையே என்ற வாதங்களும் உள்ளன.
தற்காலப் பெண்ணியவாதிகள் பெண்ணியத்தை இன, சமூக, கலாசார, மத எல்லைகளைக் கடக்கும் அடிப்படை இயக்கமாகக் கருதுகின்றனர். ஒரு வினைத்திறன்மிக்க பெண்ணிய இயக்கமானது
வன்புணர்ச்சி, தகாப்புணர்ச்சி, பாலியற் தொழில் போன்ற பொதுப்பிரச்சினைகளையும் குறித்த சமூகங்களுக்குரிய சிறப்புப் பிரச்சினைகளையும் கவனத்திலெடுக்க வேண்டும் என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்

பெண்ணியத்தின் வகைப்பாடுகள்
பெண்ணியம் சார்ந்து இயங்கும் சக்திகளின் சமூக, அரசியல், கோட்பாட்டுச் சார்பு நிலைகளைக்கொண்டு பெண்ணியம் பல வகைப்பாடுகளுள் அடக்கப்படுகிறது. விமர்சனம், ஆய்வு முயற்சிகளை இலகுபடுத்தவும், வேறு பல தேவைகளுக்குமாகச் செய்ய்ப்படும் இத்தகைய வகைப்படுத்தல் முழுமையானதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

உலக அளவில் பெண்ணிய வகைப்பாடுகள்

தமிழ்ச் சூழலில் பெண்ணிய வகைப்பாடுகள்

மார்க்சியப் பெண்ணியம்
தலித் பெண்ணியம்
தேசியப் பெண்ணியம்
இந்து மதப் பெண்ணியம்
இஸ்லாமியப் பெண்ணியம்
மரபுசார் பெண்ணியம்
தீவிரப் பெண்ணியம்