Thursday, November 20, 2008

இலங்கை - அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தம்

இலங்கை இறைமைக்கு வைத்த வேட்டு
இலங்கை அரசாங்கம் கிழக்கிலே யுத்தத்தை நடத்தி வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருப் பதாகவும் எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச் செய்து கொண்டிருப்பதாகவும் அறிவித்துக் கொண்டிருக்கையில், மின்னாமல் முழங்காமல் கடந்த மார்ச் 5ஆம் திகதி கொழும்பில் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்தானது. இலங்கையின் சார்பில் பாதுகாப்புச் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷவும், அமெரிக்காவின் சார்பில் அமெரிக்கத் தூதுவர் றொபேட் பியோக்கும் இந்த “நசுக்கிடாமல்” நடந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். பி.பி.சியின் சந்தேசிய சிங்கள சேவையில். ஓப்பந்த விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று இலங்கை அரசின்சார்பில் அறிவித்த கெஹெலிய ரம்புக்வெல அறிவித்ததோடு சரி. இன்றுவரை எந்த விபரமும் வெளிவரவில்லை. புலிகளின் வீழ்ச்சியில் சந்தோசப் பட்டுக் கொண்டிருக்கும் தென்னிலங்கைக்கு மேலும் சந்தோசம் ஊட்டவென்று சொல்வதற்கு ரம்புக்வெல வுக்கு நிறையவே தகவல்கள் இருப்பதால் அவரிடம் யாரும் இது பற்றிக் கேட்கவில்லை.

ஆனால் அமெரிக்க உயர் ஸ்தானிகராலயம் இந்த ஒப்பந்தம் பற்றி இவ்வாறு தெரிவித்தது. இந்த ஒப்பந் தம் இலங்கை. அமெரிக்க அரசுகளுக்கு போக்கு வரத்துத் தொடர்பான வழங்கல்களை மாற்றிக் கொள் ளவும், வழங்கவும், உதவி மற்றும் எரிபொருள்த் தேவைகளை விருப்பத்தின் பேரிலோ அல்லது விலை க்கோ செய்யவும், சமாதான பாதுகாப்பு நடவடிக்கை களின் போதும், மனிதாபிமான நடவடிக்கைகளின் போதும் வேண்டிய கூட்டு நடவடிக்கைகளுக்கும் இது உதவுகிறது. 'புதிய கொள்வனவுகள் மற்றும் மாற்றுச் சேவைகள் ஒப்பந்தம்' (வுhந நெற யுஉஙரளைவைழைn யனெ ஊசழளள ளுநசஎiஉiபெ யுபசநநஅநவெ) என்ற பெயரில் கைச்சாத்தான இந்த ஒப்பந்தம், அமெரிக்காவுக்கு இன்னுமொரு இராணுவத் தளத்தை உருவாக்கு வதற்கான ஒரு ஒப்பந்தமே என்பதை காலம் விரைவில் உணர்த்தப் போகிறது.

உண்மையில் இத்தகையதொரு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதற்கான முயற்சி 2002 இலேயே நடந் தது. அப்போது இலங்கை வந்த கிறிஸ்டினா றொக்காவின் தலைமையிலான குழு அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் பாதுகாப் பமைச்சர் திலக் மாரப்பணவுடனும் இது பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தினார். 2002 யூ=லை 22 இல் கைச்சாத்திட இருந்த இது போன்ற ஒரு ஒப்பந்தம், இந்திய அரசாங்கம் தனது அதிருப்தியை வெளிக் காட்டியமையினால் கைவிடப்பட்டது. இது பின்னர் 2004 இல் வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் அமெரிக் கர்களுடனான சந்திப்பின் போது, தாம் இந்த ஒப்பந்தத்திற்கு தயார் என அறிவித்ததை அடுத்து மீள வும் இது முடுக்கி விடப்பட்டது. ஆயினும் பின்னர் அது கைச்சாத் தாகவில்லை. அந்த ஒப்பந்தம் தான் இப்பொழுது யாரும் அறியாத நேரத்தில் “நசுக்கிடாமல்" கைச்சாத் தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட 90ஆவது நாடாக இலங்கை ஆகியுள்ளது. இதுவரை 89 நாடுகள் ஏற்கெனவே கைச்சாத் திட்டிருப்பதால், இந்த ஒப்பந்தத் தின் விளைவுகள் எப்படிப்பட்ட வை என்று அறிந்து கொள்வது ஒன்றும் கடினமானதல்ல. ஆயினும் மார்ச் 5ஆம் திகதி கைச்சாத்தான இந்த ஒப்பந்தம் பற்றி யாரும் அக்கறைப்படுவதாகத் தெரிய வில்லை.

இந்த ACSA ஒப்பந்தத்தின் உண்மையான அர்த்தம் தான் என்ன? இந்த ஒப்பந்தத்ததைப் பற்றி மேலோட்டமாகப் பார்க்கையில் தெரிவது என்னவென்றால், அது அமெரிக்க இராணுவம் பரஸ்பர போக்குவரத்துத் தளபாட உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு சட்டபூர்வ கட்டமைப்பாக மட்டுமே தோன்றும். ஆனால் இதற்குப் பல ஆழமான அர்த்தங்கள் உண்டு. இந்த ஒப்பந்த மூலமாக, வெளிநாட்டு இராணுவ விற்பனைகள் மிகவும் வினைத்திற னுள்ள முறையில் செயற்படுத்தப் பட முடியும். ஆரம்பத்தில் Nயுவுழு நாடுகளுக் கிடையில் இருந்து வந்த ஒத்துழைப்புச் சட்டம் பலமுறை இருந்து வந்த பல்வேறு மூலோபாய நோக்கங்களுக்காக திரும்பத் திரும்பத் திருத்தப்பட்டு Nயுவுழு அல்லாத நாடுகளும் சேர்ந்து கொள்ளக் கூடிய நிலைக்கு மாற்றப் பட்டுள்ளது. இப்போது கைச்சாத் தான ஒப்பந்தமும் அப்படி மாற்ற ப்பட்ட ஒப்பந்ததமே மார்ச் 5ஆம் திகதி ஒப்பமிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தமானது, அதன் ஆரம்பத் திலேயே அமெரிக்காவின் பயங்கர வாதஒழிப்பும், இறையாண்மை யைக் காத்தலும் என்ற உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்து கிறது. இந்த ஒப்பந்தத்தில் இதை விட பல மிக முக்கியமான விடயங் கள் கவனிக்கப்படாமலேயே விடப் பட்டுள்ளன. முக்கியமான விடயம் என்ன வென்றால், இந்த ஒப்பந்தத் திற்கு Nயுவுழு வில் இல்லாத ஒரு நாடு தெரிவு செய்யப்படுவதற்கு எந் தெந்த அடிப்படைத்தகுதிகள் அவசியம் என்பதாகும். இதை யாரும் கவனிக்கவில்லை. Nயுவுழு இல் அங்கம் வகிக்காத ஒரு நாடு, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமானால் அது இத்தகைய தகுதிளை அல்லது அவற்றில் ஒன்றைக் கொண்டிருக்கவேண்டும். அது அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாட்டில் இருத்தல் வேண்டும். அல்லது அமெரிக்கப் படை வந்து தங்க அனுமதிக்க வேண்டும், அல்லது அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் அங்கு வருவதை அனுமதிக்க வேண்டும், அல்லது அமெரிக்கப் படைகள் தமது நடவ டிக்கைகளை அந்த நாட்டில் செய்ய அனுமதிக்க வேண் டும்.

இந்தத் தகவல்களை அமெரிக்க அரசின் பாதுகாப்புக் கட்டளை களிற் காணலாம். இன்னும் பல இரகசியக் கட்டளைகள் வெளி யிடப்படாமல் இருக்கின்றன. இந்த ஒப்பந்தம் ஆயுதங்களைப் பெற்றுக் கொள்வதை அனுமதிக்காது என்று அமெரிக்காவால் கூறப்படுகின்ற போதும், இலங்கையிலுள்ள அமெ ரிக்கத் தூதராலயம் வெளியிட்ட அறிவிப்பில் ஆயுதம் வழங்குவது தொடர்பான விபரமான குறிப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எந்த விதமான விசாரணையும் இல்லாமல் எந்த விதமான யுத்த ஆயதங்களும் இதன் மூலம் வழங்கப்பட முடியாது என்று கொழும்பு ஊடகங்கள் அரச அறிவித்தலைத் திரும்பத் திரும்பத் தெரிவிக்கின்றன. ஆனால் உண்மை அதுவல்ல. இந்த ஒப்பந் தத்தின் பின்னரும் அனுமதிக்கப் பட்டதாகக் கூறப்படும் பொருட் களில் எண்ணெய், ஒயில், உதிரிப் பாகங்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது. இப்பட்டி யலின் இறுதியில் இவ் ஒப்பந்தத் தில் கைச்சாத்திடும் நாடுகளுக்கு அனுமதித்திருக்கும் ஆயுதங்களில் சிறியரக ஆயுதங்கள், தோட்டாக் கள், மோட்டார்கள், தானியங்கிப் பீரங்கிகள், எறிணைகள், கப்பற் துவக்குத் தோட்டாக்கள், தொகு திக்குண்டுகள் (ஊடரளவநச டீழஅடிள) நிலைக் கண்ணிகள், எறிகுண்டுகள் என்று ஒரு பெரும்பட்டியலே இருக்கிறது. இதுதான் இந்த ஒப்பந்தத்தின் உண்மை நிலைமை.

மேற்குப் பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவில் அமெரிக்கா தனது இராணுவ ஆதிக்கத்தை பலப்படுத் துவதில் பிலிப்பைன்ஸ் நீண்ட காலமாக பயன்படுத்தப் பட்டு வந்தது. பிலிப்பைன்ஸில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அந்த நாட்டில் ஏற்படுத்திய நிலைமை எமக்கு ஒரு நல்ல உதாரணமாகும். மின்டனோ எழுச்சியைத் தொடர்ந்து வந்த சுதந்திரப் போராட்டம் இரண்டு இலட்சத்திற் கும் மேற்பட்ட அமெரிக்க இராணு வத்தை அங்கு குவிக்கக் காரண மாக மாறியது. பிலிப்பைன்ஸில் நிறுவப்பட்ட கடற்படை மற்றும் விமானப் படைத் தளங்கள் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எவ்வாறு பயன்பட்டன என்பது வரலாறு. கொரிய யுத்தம் மற்றும் விக்ரோறியன் யுத்தம் போன்ற வற்றிற்கு எவ்வாறு பிலிப்பைன்ஸ் அமெரிக்காவின் செயற்பாட்டுத் தளமாக இருந்தது என்பது ஒன்றும் மறந்து போன கதையல்ல.

அமெரிக்காவின் இந்த புதிய வழியிலான ACSA ஒப்பந்தம் ஒன்று 1992 நவம்பரில் பிலிப்பை ன்ஸில் கைச்சாத்திடப்பட்டது. ஆமெரிக்கர்கள் இந்த ஒப்பந்த த்தை ஒரு மிகச் சிறப்பான நட்பு ரீதியான ஒரு ஒப்பந்தம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் இன்றுவரை இலங்கையிலுள்ள யாரும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடங்கிய விடயங்கள் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், தமது நீண்ட கால அமெரிக்க அடக்கு முறை அனுப வத்தின் காரணமாக பிலிப்பைன்ஸ் மக்கள் இந்த ஒப்பந்தத்தில் மறைந் திருக்கும் நோக்கங்களை அறிந்து கொண்டார்கள். ஒரு பலமான எதிர்ப்புப் போராட்டமொன்றை அவர்கள் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக நடத்தினார்கள். அவர்களது போராட்டம் இன்னமும் தொடர் கிறது.

இலங்கையில் செய்து கொள்ளப் பட்ட இந்த ஒப்பந்தம் அமெரிக் காவின் செயற்பாடுகளை இலங்கை யில் அதிகரிப்பதற்கான ஒரு திட்ட மே. பாரசீகக் குடாப் பிராந்தியத் திலும் மத்திய ஆசியாவிலும் இன்றுள்ள உலக அதிகார அரசி யல் நிகழ்ச்சி நிரல்கள், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவத்தை முன்னெப்போ தையையும் விட அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் இலங்கையுட னான ஒப்பந்தம் இந்த முக்கியத்து வத்தை கணக்கிலெடுத்துச் செய்யப் பட்ட ஒரு இராணுவ நோக்கிலான ஒப்பந்தமே. கிழக்கை விடுவிப் பதில் எந்த இறைமையைத் தலை மீது தூக்கி வைத்துக் கொண்டு இந்த அரசாங்கம் இன்று யுத்தத்தில் இறங்கியிருக்கிறதோ, அந்த இறை மையை அமெரிக்காவிடம் ஒரு கைச்சாத்தின் மூலம் வழங்கிவிட்டி ருக்கிறது. இந்த இறைமை இழப்புக்கு இக்கை ச்சாத்து ஒரு ஆரம்பம் மட்டுமே. விளைவுகள் இனித்தான் வெளித் தெரியப் போகின்றன

No comments: