Tuesday, October 28, 2008

நினைவு மையம் (Memory Centre)

அமெரிக்காவில் உள்ள ஒரு நரம்பியல் நிறுவனத்தில் 1952-53ஆம் ஆண்டுவாக்கில் 43 வயது நிரம்பிய பெண்மணி ஒருவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. மருத்துவர் ஒருவர் அவரது தலையின் ஒரு பகுதியைத் திறந்து மூளையை ஆய்வு செய்தார். இவ்வாய்வு நடைபெறுகையில் அப்பெண்மணிக்கு முழு நினைவு இருந்ததோடு மட்டுமல்ல அவர் எவ்வித வலிக்கும் ஆளாகவில்லை. அறுவை சிகிச்சை நடைபெற்ற அப்பகுதி மட்டும் மரத்துப் போகின்றவகையில் உணர்விழப்பு மருந்து அளித்திருந்தனர். இந்த வியத்தகு அறுவை சிகிச்சையை நடத்தியவர் டாக்டர் பென்·பீல்ட் என்ற மருத்துவர். அறுவை சிகிச்சையின்போது தம் கையிலிருந்த கருவி ஒன்றிலிருந்து கம்பிகளின் வழியாக திறந்திருந்த மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மின்சாரம் செலுத்துவதற்கு அவர் ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்.

டாக்டர் பென்ஃபீல்ட் கம்பிகளின் வழியே மின்சாரத்தை மூளையின் குறிப்பிட்ட அப்பகுதியில் செலுத்தியவுடனே, அந்தப் பெண்மணி ஒரு குழந்தையைத் திட்டுவது போலப் பொருளற்ற சொற்களை உளறத் தொடங்கினார். ஆனால் மின்சாரம் செலுத்துவதை நிறுத்தியவுடனே, அப்பெண்ணும் உளறுவதை நிறுத்தி விட்டார்.

அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், இயல்பு நிலைக்குத் திரும்பிய அப்பெண்மணியிடம் டாக்டர் பென்ஃபீல்ட் கேட்டார்: "சிகிச்சையின்போது நீங்கள் கேட்ட இப்பேச்சுகள் நினைவிற்கு வருகின்றனவா?, அவற்றைப் பேசியவர் யார் என்பது தெரிகிறதா?" சிலவற்றை நினைவுபடுத்திப் பார்த்த அப்பெண்மணி இப்பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன்; ஆனால் அவற்றை நான் பேசவில்லை எனக் குறிப்பிட்டார். மீண்டும் டாக்டர் அப்பெண்ணிடம் இப்பேச்சுகளை யாரிடமிருந்து கேட்டீர்கள் என வினவ, அவர் தன் தாய் தன்னை இப்பேச்சுகளால் திட்டியதாகப் பதில் கூறினார்.

"உங்கள் தாய் இப்போது உயிருடன் இருக்கிறாரா?" டாக்டர் வினவினார். "இல்லை. அவர் இறந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன" அப்பெண்மணி விடை கூறினார். வியப்படைந்த டாக்டர் மீண்டும் வினவினார் : "அப்படியானால், இந்நிகழ்ச்சிகளைக் கனவு கண்டீர்களா?" பெண்மணி கூறினார்: "இல்லை, நிகழ்ச்சிகளை நினைவு படுத்திக் கற்பனை செய்து பார்த்தேன்; சிறு பெண்ணாகவே மாறிவிட்டேன்; என் தாய் என்னை அடிக்கடி திட்டும் சொற்களால் திட்டுவதாகவே உணர்ந்தேன்."

நினைவு மையத்தின் புதிர்களைக் கண்டறிய விரும்பிய டாக்டர் பென்ஃபீல்ட் இத்தகையப் பரிசோதனைகள் பலவற்றைச் செய்தார். மூளையில் நினைவு மையத்தின் இருப்பிடத்தையும், அம்மையத்தில் நினைவுகள் எவ்வாறு பதிவு செய்யப்படுகின்றன என்பதையும் தமது ஆய்வுப் பரிசோதனைகள் வாயிலாக இறுதியில் பென்ஃபீல்ட் கண்டறிந்தார். மனித மூளையின் பணிகளில் மிகவும் வியக்கத்தக்க, புதிய, நம்பமுடியாத பல தகவல்கள் அவரது பரிசோதனைகள் வாயிலாக வெளிவந்தன. தமது ஆய்வில் சிறப்புச் சோதனையாக நினைவு மையச் சோதனையை பென்ஃபீல்ட் மேற்கொண்டார்.

டாக்டர் பென்ஃபீல்ட் காக்கை வலிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்போதே, மனித மூளையின் செயல்பாடுகளில் ஆய்வுகளையும் மேற்கொண்டு வந்தார். மூளையின் குறிப்பிட்ட பகுதி சரியான முறையில் இயங்காமலிருப்பதே காக்கை வலிப்பு நோய்க்குக் காரணம்; அப்பகுதியை அறுவை சிகிச்சையின் வாயிலாக அகற்றிவிட்டால் நோய் குணமாகும் என அவர் நினைத்தார். எனவே மூளையின் அப்பகுதியை அறுவை சிகிச்சை நடத்தி நீக்குவதற்கான வழி வகையைக் கண்டறிந்ததோடு, மூளையின் நினைவு மையத்தில் சோதனைகளையும் நடத்தினார்.

மூளையிலுள்ள நினைவு மையத்தின் குறிப்பிட்ட ஒரு புள்ளியில் மின்சாரத்தைச் செலுத்தினால், அப்புள்ளியில் பதிவாகியுள்ள நினைவுகள் வாய் வழியே வெளிப்படும். நினைவுப் பகுதியில் இத்தகைய புள்ளிகள் ஆயிரக் கணக்கில் உள்ளன; அவற்றில் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு புள்ளியிலும் ஒரு குறிப்பிட்ட வகையான நினைவு பதிவாகியிருக்கும். இந்த நினைவு மையத்தை ஒரு கிராமஃபோன் இசைத்தட்டுக்கு ஒப்பிடலாம். இசைத்தட்டின் எந்த ஒரு வரியில் கிராமஃபோன் இசைத்தட்டு ஊசியை வைத்தாலும், அவ்வரியில் பதிவாகி இருக்கும் பாடல் வரிகளின் சொற்கள் அல்லது இசை ஒலி வெளிவரும். நினைவு மையமும் இவ்வாறே செயல் புரிகிறது. நினைவு மையத்தின் எந்தப் புள்ளியில் மின்சாரத்தைச் செலுத்தினாலும் அப்புள்ளியில் பதிவாகி இருக்கும் சொற்கள் தூண்டப்பெற்று உதடுகள் வழியே வெளிவரும்.

மனித வாழ்வில் நடைபெற்ற சாதாரணமான அல்லது அசாதாரணமான எந்த ஒரு நிகழ்வும் அவனது மூளையின் நினைவு மையத்தில் இயல்பாகவே பதிவாகி விட¸¢றது. சில நேரங்களில் நம் வாழ்வில் நடைபெற்ற சில நிகழ்வுகளை அவற்றின் பயன்பாடின்மை காரணமாக மறந்து விடுகிறோம். அதே நேரத்தில் வேறு சில நிகழ்வுகளை அவற்றின் முக்கியத்துவம் காரணமாக வாழ்நாள் முழுதும் நினைவில் வைத்திருக்கிறோம். ஆனால் எது முக்கியமற்றது, எது முக்கியமானது என்பதை நமது மூளை அறிவதில்லை. எல்லா நிகழ்வுகளையும் மூளை நினைவு மையத்தில் பதிவு செய்து அவற்றை வாழ்நாள் முழுதும் சேமித்து வைத்துக் கொள்கிறது.

நினைவு மையத்தில் சேமித்து வைக்கப்பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட நினைவிற்கு இணையான சில நிகழ்வுகள் அல்லது விவாதங்கள் நடைபெறும்போது அக்குறிப்பிட்ட நினைவு மீண்டும் புத்துயிர் பெறுகிறது. இப்புத்துயிர்ப்பு, நமது மூளையின் நினைவு மையத்தில் உரிய புள்ளியை நமது உடலில் நடைபெறும் இயற்கை உணர்ச்சிகள் தூண்டுவதால் நிகழ்கிறது. இத்தூண்டல் செயலை நிறைவேற்ற டாக்டர் பென்ஃபீல்ட் மின் அலைகளைப் பயன்படுத்தினார்.

ஏதேனும் ஒரு பொருள் பற்றிச் சிந்திக்கும்போது, நினைவு மையத்தில் அப்பொருளுக்கு உரிய நினைவுகள் பதிவு செய்யப்பட்டிருக்கும் புள்ளிகளை இயற்கை உணர்வுகள் தூண்டி விடுகின்றன; இதனால் எண்ணங்கள் துண்டிக்கப்படாமல் சிந்தனை ஓட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. சில வேளைகளில் தொடர்பில்லாத, வேறு நினைவுப் புள்ளியை இயற்கை உணர்ச்சிகள் தூண்டிவிடுவதால், சிந்தனை ஓட்டம் தடைபடுவதுமுண்டு. இதனால் தொடர்பில்லாத வேறு சில சிந்தனைகளும் நமது நினைவுக்கு வரக்கூடும். பார்வை, கேட்கும் திறன், பேச்சு இவற்றிற்கான மையங்கள் மூளையின் எப்பகுதியில் அமைந்துள்ளனவோ, அங்கேயே நினைவு மையமும் அமைந்துள்ளது. இந்நினைவு மையத்துடன் நமது அன்றாட வாழ்வு பின்னிப் பிணைந்துள்ளது. நாம் சிலவற்றைக் கேட்கும்போது அல்லது உற்றுப் பார்க்கும்போது, நமது மூளையில் உயிர் வேதியியல் சமிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு பதிவாகும் சமிக்கைகள் எப்போதும் நீக்கப்பட இயலாதவை. நினைவுச் சேமிப்பகமானது நம் வாழ்நாள் நீடிப்பதற்கேற்ப விரிந்து செல்லக்கூடியது.

நாம் வாழ்வில் புதிய அனுபவங்களை எதிர்கொள்ளும்போது, அதற்குத் தொடர்புள்ள பழைய நினைவுகள் வெளிப்படுகின்றன. இதனாø பழைய மற்றும் புதிய அனுபவங்கள் ஒன்றிணைந்து முற்றிலும் புதியதோர் அனுபவம் உருவாகிறது எனலாம். ஒரு சுவையான எடுத்துக்காட்டுடன் இதனை விளக்குவோம்.

சிறு குழந்தை ஒன்று மிகப் பெரியதோர் நாயை முதன்முறையாகப் பார்க்கிறது. நாய் பற்றிய அனுபவம் இதற்கு முன்பு இல்லாததால் குழந்தை எவ்வித உணர்வையும் வெளிப்படுத்தாமல் இருக்கலாம். திடீரென்று அந்த நாய் குரைத்து குழந்தை மீது பாய்கிறது. அச்சமுடன் திகிலுற்ற அக்குழந்தை வீறிட்டு அலறுகிறது. பெற்றோர் நாயை விரட்டி விட்டு அக்குழந்தையைத் தேற்றுகின்றனர். சிறிது நேரத்தில் குழந்தை அந்நிகழ்ச்சியை மறந்து விட்டு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுகிறது. சில நாட்களுக்குப் பின்னர் குழந்தை வேறொரு நாயை மீண்டும் காண நேர்கிறது. அந்த நாய் குரைக்கவில்லை; குழந்தை மீது பாயவில்லை; வாலை ஆட்டிக்கொண்டு அமைதியாக இருக்கிறது. இருப்பினும் குழந்தை முன்பு போலவே வீறிட்டு அச்சத்துடன் அழத் துவங்குகிறது. முந்தைய நிகழ்வு குழந்தையின் மூளையில் பதிவாகி, அந்நினைவு இப்பொழுது வந்திருப்பதே குழந்தையின் அழுகைக்குக் காரணம் எனலாம்.

டாக்டர் பென்ஃபீல்டின் குறிப்பிடத் தகுந்த இக்கண்டுபிடிப்பே அவரது மன நல சிகிச்சையில் முக்கிய பíகு வகித்தது.ஒரு மனிதன் தனது குழந்தைப் பருவத்தில் அனுபவித்த அதிர்ச்சிகள், கசப்பான அனுபவங்கள் ஆகியன நினைவு மையத்தின் ஒரு மூலையில் தங்கியிருந்து எதிர் காலத்தில் மனநோய்க்குக் காரணமாக அமைந்து விடுகின்றன. இத்தகைய மன நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அவர்களது மூளையின் நினைவு மையத்தில் பதிவாகி இருக்கும் நினைவுகள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. பல்வேறு வகையான மன நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க இத்தகைய ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் வெற்றியும் சிறந்த முன்னேற்றமும் உண்டாகியுள்ளன என்பதில் ஐயமில்லை.

"தாவரங்களுக்கும் உயிருண்டு"

தாவரங்களும் பிற உயிரினங்களைப் போன்றே வாழ்க்கை நடத்துவன என்று உலகப் புகழ் பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் டாக்டர் ஜகதீஷ் சந்திர போஸ் (1858-1937) நிறுவிய போது இவ்வையகமே அவரைக் குழப்பத்துடன் நோக்கியது.
மற்ற உயிரினங்களைப் போன்று தாவரங்களும் துன்ப, துயரங்களுக்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகின்றன என அவர் கண்டறிந்தார். சில போதைப் பொருள்களுக்கு உள்ளாகும்போது தாவரங்களும் தம் நினைவை இழந்து மயக்கமுறுகின்றன என்றும் டாக்டர் போஸ் ஆய்வு செய்து வெளியிட்டார்.

டாக்டர் போஸின் முடிவுகள் அறிவியல் உலகையே குழப்பமடையச் செய்தன; தாவர உலகம் என்னும் புத்தம் புதியதோர் உலகமே கண்டறியப்பட்டது. தாவர உயிரினங்கள் பற்றிய தமது ஆய்வுகளையும், ஆய்வு முடிவுகளையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளாக ஒரு நூல் வடிவில் டாகடர் ஜகதீஷ் சந்திர போஸ் 1902ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்நூலின் பெயர் "The Reaction of Living and Non-living" என்பதாகும்.

தாவரங்களின் செயற்பாடுகளுள் பல மனிதர்களின் மற்றும் விலங்குகளின் செயற்பாடுகளை ஒத்தனவே என்பதை நிரூபிக்கும் ஆய்வுகளை போஸ் மேற்கொண்டார். நுரையீரல்கள் இல்லாவிட்டாலும், தாவரங்கள் சுவாசிக்கின்றன; வயிறு இல்லாவிடினும் தாவரங்கள் உணவைச் செரிக்கின்றன; தசைகள் இல்லாவிடினும் அவை பல செயல்களை மேற்கொள்ளுகின்றன; நரம்பு மண்டலம் இல்லாவிட்டாலும் தாவரங்கள் உணர்ச்சித் தூண்டல்களுக்கு உள்ளாகின்றன; இவற்றை நிரூபிப்பதற்கான சோதனைகள் பலவற்றை அவர் நடத்தினார்.

டாக்டர் போஸ் தாவரங்கள் சுருங்குவதைப் பதிவு செய்யும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்தார்; அதற்கு "ஒளியிழை நாடிப்பதிவி (Optical Pulse Recorder)" எனப் பெயர். இக்கருவியின் உதவியோடு தாவரங்களின் உள் செயற்பாடுகளைப் பதிவு செய்ததுடன், பல்லிகள், தவளைகள், ஆமைகள், பழங்கள், காய்கறிகள் தாவரங்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகளுக்கு இடையேயான ஒற்றுமைகளை அவர் விளக்கிக் காட்டினார். தாவரங்கள் மின் அலைகளை உற்பத்தி செய்கின்றன என்பதையும், பிற உயிரினங்களைப் போன்று அவையும் களைப்படைந்து போகின்றன என்பதையும் கண்டறிந்தார்.

அவர் தமது ஆய்வுகளுள் ஒன்றை மேற்கொண்டிருக்கும் போது, இறந்து போகும் தாவரம் ஒன்று வலிமை மிக்க மின்னோட்டத்தை வெளிப்படுத்துவதைக் கண்டறிந்தார். அளவுக்கு அதிகமான கரியமில வாயுவை உட்கொள்ளும்போது தாவரங்களும் மற்ற உயிரினங்களைப் போன்றே இறந்து விடுகின்றன என போஸ் நிரூபித்தார். அதே வேளையில் உயிர்வளியின் உதவியுடன் அவை பிற உயிரினங்களைப் போன்று உயிர் பெற இயலும் என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.

டாக்டர் போஸ் அவர்களின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளுள் ஒன்று என்னவெனில், போதைப் பொருள்களின் தாக்கத்தால் தாவரங்களும் மயக்க நிலையை அடைகின்றன என்பதாகும். இதற்கான சோதனையின் போது தாவரங்கள் மயக்க நிலை காரணமாக, ஆழ்துயில் கொள்வதையும், பின்னர் மெதுவாக மயக்க நிலை நீங்கி அவை இயல்பு நிலைக்குத் திரும்புவதையும் அவரால் கவனிக்க முடிந்தது.

தாவரங்களின் செயற்பாடுகள், அவற்றின் வளர்ச்சி முறை, அவற்றுள் உள்ள திரவம் மேல் நோக்கிப் பாய்தல் போன்ற பலவும், அவை சுற்றுச் சூழலில் இருந்து பெறும் ஆற்றலின் காரணமாகவே நிகழ்கின்றன என்றும், இந்த ஆற்றலை அவை தம்முள் சேமித்து வைத்துக் கொள்கின்றன என்றும் போஸ் நிறுவினார்.

போஸ் 1918ஆம் ஆண்டு "கிரெஸ்கோகிராஃப் (Crescograph)" என்னும் கருவி ஒன்றை வடிவமைத்தார். இக்கருவியின் வாயிலாகத் தாவரங்களின் இயக்கங்களைப் பல்லாயிரம் மடங்கு உருப்பெருக்கத்தில் காண முடிந்தது. மேலும் தாவரங்களில் ஒரு நிமிடத்திற்குள் நிகழும் மாற்றங்களையும் இக்கருவி பதிவு செய்யக்கூடியதாக விளங்கியது. ஒரு சில தாவரங்களைத் தொட்டாலே அவற்றின் வளர்ச்சி தடைபடுவதாகவும் அவர் கண்டுபிடித்து வெளியிட்டார்.

டாக்டர் போஸ் அவர்களின் சிறப்பு வாய்ந்த ஆய்வுகளையும், கண்டுபிடிப்புகளையும் பற்றிப் புகழ் மிக்க பிரெஞ்சு சிந்தனையாளர் ஹென்ரி பெர்க்சன் இவ்வாறு பாராட்டிக் கூறினார்: "டாக்டர் போஸ் செய்த சோதனைகளும், கண்டுபிடித்த கருவிகளும் ஊமைத் தாவரங்களுக்குப் பேசும் ஆற்றலை வழங்கி உள்ளன."

தாவரங்களின் விருப்பு வெறுப்புகள் என்ன, அவற்றின் துன்ப துயரங்கள் யாவை, அவை கூற விரும்புவது என்ன, அவற்றுக்கு இன்னலும், இடரும் விளைவிப்பன யாவை, அவற்றிற்கு மகிழ்ச்சி ஊட்டுவன எவை, என்பன பற்றிய விவரங்களை எல்லாம் ஜகதீஷ் சந்திர போஸின் கண்டுபிடிப்புகள் விளக்கிக் கூறின. தாவரங்களின் சுவாசிப்பையும், குரல் ஒலியையும் ஒரு கருவியால் உணரச் செய்யலாம் எனவும், தாவரங்கள் உயிர் வாழ்வன, சுவாசிப்பன எனவும் தமது கண்டுபிடிப்புகள் வாயிலாக போஸ் அவர்கள் நிரூபித்தார். மலர் ஒன்றைப் பெண் ஒருத்தியின் மீது எறிந்தால், அதிகத் துன்பம் உண்டாவது பெண்ணுக்கா அல்லது மலருக்கா என ஓர் அறிவியல் அறிஞர் போஸின் ஆய்வுகள் குறித்துப் பேசும் போது வினவினார்.

உலக இயற்பியல் மாநாடு 1900ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்றது; அதில் போஸ் "பன்முகத்தன்மை கொண்ட இயற்கையில் அடிப்படை ஒருமைப்பாடு" என்ற தமது ஆய்வுக் கட்டுரையை வாசித்தார்; அதனைச் செவிமடுத்த அறிஞர்கள் போஸின் கருத்துகளைக் கேட்டு திகைத்து நின்றனர். "இயற்பியல் நிகழ்ச்சிகள் ஒரு வரம்புக்குக் கட்டுப்படாதவை; குறிப்பிட்ட எல்லைக்குள் இயற்பியல் நிகழ்வுகளை அடக்க இயலாது; உயிருள்ளவைக்கும், உயிரற்றவைக்கும் இடையேயான வேறுபாடுகள் நாம் நினைப்பது போல் அதிகமல்ல, ஆய்வுக்கு அப்பாற்பட்டதுமல்ல;" இவை போன்ற கருத்துகள் அவரால் விளக்கப்பட்டன.

டாக்டர் போஸின் கருத்துகள் அக்கால மக்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை; அவரது கருத்துகளைப் பொருளற்றவை எனக் கூறியோரும் உண்டு. ஆனால் தமது முடிவுகளை 1902ஆம் ஆண்டு போஸ் வெளியிட்டு, செயல்முறை விளக்கம் செய்து காட்டிய போது மக்கள் பெரும் வியப்பில் ஆழ்ந்து போயினர்.

பிரிட்டிஷ் அரசு 1917ஆம் ஆண்டு "சர்" பட்டம் அளித்து அவரைப் பாராட்டியது. தமது 59ஆம் அகவையின் போது கலகத்தாவில் ஓர் ஆய்வு நிறுவனத்தை போஸ் நிறுவினார். போஸின் கண்டுபிடிப்புகளைப் பற்றி ஜெர்மன், ஆஸ்திரிய விஞ்ஞானிகள் பாராட்டிப் பேசும் போது, இந்தியா அறிவியல் துறையில் பன்மடங்கு முன்னேறியுள்ளதாக ஒப்புக்கொண்டனர்.

இயற்கை முழுதும் உயிர்ப்பும், உணர்வும் நிரம்பி, கிளர்ச்சியுடன் துடித்துக் கொண்டு இருப்பதாக ஜகதீஷ் சந்திர போஸ் கூறி வந்தார். இயற்கை தன்னைப் பற்றிய பல புதிர்களை வெளியிட்டு வருவதாகவும், உரிய முறையில் அவற்றைப் புரிந்து கொண்டால் இயற்கையுடன் உறவாடுவதும், உரையாடுவதும் கடினமல்ல என்பதும் அவரது கருத்தாகும்

Saturday, October 25, 2008

"பூடகமான" மார்க்சிய எதிர்ப்புப் பெண்ணியம்

ஜாதி வேற்றுமை" பெண்ணை ஒடுக்கும் விதிமுறைகள் ஆகியவற்றைப் போதிக்கும் மனுதர்மம் என்ற நூலை எதிர்த்துப் போராடுவதில் மட்டுமே தலித்தியமும் பெண்ணியமும் ஒன்று சேர்கின்றது. மற்ற எல்லா பரிணாமங்களிலும் பெண்ணியமும் தலித்தியமும் வௌவேறு போராட்டங்கள்"67 என்று ஏழுதுகின்றார் ஆனால் எப்படி என விளக்கவில்லை.

மனு தர்மம் என்ற நூலை எதிர்த்து எப்படி பெண்ணியம் போராடும் ஐயா? பார்ப்பனியப் பெண்ணியம் அதாவது அ.மார்க்ஸ் குறிப்பிடும் "மிருதுளா சின்கா" எப்படி மனுதர்மத்தை எதிர்க்கும். அ.மார்க்ஸ் என்ற அறிவியல் ஆய்வாளர் பெண்ணியத்தை வரையறுப்பது கேலிக்குரியது என்கின்றார். நீங்கள் எந்தப் பெண்ணியத்தைச் சொல்லுகின்றீர்கள். கேலி செய்யும் பெண்ணியத்தையா? எதை?

மனுதர்மப் பெண்ணியத்தை எதிர்க்க வேண்டுமாயின் அது உண்மையான பெண்ணியமாக இருக்கவேண்டும். அது ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து சுரண்டலை, ஆணாதிக்கத்தை, மற்ற பூர்சுவா மற்றும் பார்ப்பனியப் பெண்ணியத்தை எதிர்த்தும், சாதி அமைப்பைக் கடந்தும் போராட வேண்டும். இந்தப் பெண்ணியம் தான் மனுதர்மத்தை எதிர்க்கும். இந்தப் பெண்ணியம் கம்யூனிசப் பெண்ணியமாகும்.
அடுத்து தலித்தியம் மனுதர்மத்தை எதிர்க்கும் என்கின்றார். இது முழுமையானது அல்ல. தலித்தியம் மனு தர்மத்தை எதிர்க்க வேண்டுமாயின், தனக்கு உள்ளேயுள்ள மனுதர்ம வழிவந்த சாதிப்படி நிலையை முதலில் தகர்க்க வேண்டும். இதைத் தலித் மனுதர்மம், மறுக்கின்றது. இது மறுக்கப்படும் போது மிக கீழ் மட்ட சாதிக்கு இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? எல்லாம் ஒன்று தான்.

மனுதர்மத்தை எதிர்த்துப் போராட வேண்டும் எனின் தலித்துக்குள் உள்ள மனுதர்மக் கூறுகளை எதிர்த்துப் போராடுவதில் தொடங்குகிறது. தலித்துகளுக்குள் உள்ள மனுதர்மத்தைப் பாதுகாத்த படி ஒருக்காலும் வெளியில் உள்ள மனுதர்மத்தைத் தகர்க்க முடியாது. மனுதர்மத்தை எதிர்த்த போராட்டம் எல்லாம் சாதிப்படி நிலை ஒடுக்குமுறைக்குள்ளும் தொடங்குகின்றது. இது சாதியைக் கடந்த போராட்டத்தைத் தொடங்குவதும், ஒடுக்கப்பட்ட மக்களின் மற்ற அனைத்துக் கோரிக்கைகளிலும் கைகோர்க்கின்றது. அப்போது மட்டும் தான் மனுதர்மத்தை ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் வேரறுக்கின்றன.

சாதியைக் கடந்து கோரும் மக்கள் தான், அதாவது பாட்டாளி வர்க்கம் தான் ஒட்டு மொத்த மனுதர்மத்திற்கு எதிராகப் போராடுகின்றது. அதை வேர் அறுக்கின்றது. மற்றவை அதைத் தக்க வைக்கவும், அ.மார்க்ஸ் கோருவது போல் சலுகைகளைக் கையேந்துவதிலும் தான் நீடிக்கின்றது.

அடுத்து அரவிந் அப்பாத்துரையின் பொன் மொழியைப் பார்ப்போம். "தத்துவரீதியில் கம்ய+னிசம் என்பது சம உரிமைக்கான போராட்டம். இது முக்கியமான பொருளாதார, சமத்துவத்திற்கான போராட்டம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ......மார்க்சியவாதிகள் பெண்ணியப் போராட்டத்தில் பங்கு பெறுவோருக்குத் துணை நிற்கக் கூடும். இதைத் தவிர்த்து கம்யூனிசத்திற்கும் பெண்ணியப் போராட்டத்திற்கும் என்ன நேரடித் தொடர்பு இருக்கின்றது என்பது ஒரு "பூடகம்""67 என்கின்றார்.

கம்ய+னிசம் பற்றி தனது "பூடகமான" நிலையில் நின்றும், திரித்தும் வெளியிடும் கம்யூனிச எதிர்ப்பு அறிவியல் சார்ந்ததல்ல. கம்யூனிசம் தத்துவரீதியாகச் சம உரிமை கோருகின்றதாம். இதைப் பொருளாதாரத்தில் கோருகின்றதாம். எல்லா வண்ணப் பிழைப்புவாதிகளும் கம்யூனிசத்தைப் பொருளாதாரப் போராட்டமாகச் சுருக்கி, அதில் போராடிப் பிழைத்து அம்பலப்படுகின்றனர்.

பொருளாதாரத்தில் சமத்துவம், சமஉரிமை தான் போதும் எனின் தொழிற்சங்கப் போராட்டம் போதுமானதாக இருக்கும். இன்றைய தொழிற்சங்கங்கள் கம்ய+னிசப் புரட்சியில் இருந்து விலகிச் சென்ற பாதை இதுதான்.


கம்யனிசம் வர்க்கப் போரைக் கோருகின்றது. வர்க்க ஆட்சியைக் கோருகின்றது. பாட்டாளி வர்க்க ஆட்சியைப் பாதுகாக்கக் கோருகின்றது. இது வர்க்க எதிரிகளை ஒழித்துக் கட்டக் கோருகின்றது. இது தனிச் சொத்துரிமையை ஒழித்துக் காட்டுகின்றது. இதன் போராட்டப் பாதையில் சம உரிமை என்பது மறுத்து விடுகின்றது. பொருளாதாரத்தில் சமத்துவத்தை அல்ல தேவையை எடுக்கக் கோருகின்றது.


பொருளாதார வாதத்துக்கு எதிராக வர்க்கப் போராட்டத்தை நிறுவ மார்க்ஸ்-லெனின் பல நிறைய தத்துவப் போராட்டங்களை நடத்தி கம்யூனிசத்தை நிறுவினர். இதைப் "பூடகம்" போல் இல்லாது படித்து கம்ய+னிசத்தைத் திரிக்காது பார்க்காதவரை எப்போதும் கம்யூனிச எதிர்ப்புதான் அகராதியாகின்றது.


பெண்ணியத்தில் சம உரிமைக்குத் துணைநிற்கும், அதற்கு வெளியில் கம்ய+னிசம் ஒரு பூடகம் என்கிறார். இது அறிவு சூனியத்தின் குருட்டுப்பார்வை தான். பெண்ணியத்திற்குச் சம உரிமை கிடைத்தபின் எப்படி ஐயா பெண்ணியக் கோரிக்கை எழும்? சம உரிமை என்பது எல்லாத் துறையிலும் நடக்க வேண்டும்.


கம்ய+னிசம் வர்க்கப் போரைப் பொருளாதாரத்தில் நடத்துவதில்லை. அது சுரண்டலுக்கு எதிராக, அதற்குக் காரணமான அனைத்துத் துறைகளுக்கும் எதிராகப் போராடுகின்றது. சுரண்டல் என்பது உருவாக்கியது தான், ஆணாதிக்கம், சாதிக் கட்டமைப்பு, பாலியல் வக்கிரங்கள் ........ என அனைத்துமாகும். இதை எதிர்க்கும் வர்க்கப் போராட்டம் சுரண்டலை ஒழிக்கும் போது அது அனைத்துத் துறையிலும் மாற்றத்தை நிகழ்த்தியிருக்க வேண்டும். இது மட்டும் தான் கம்ய+னிசத்தின் கோரிக்கையும் வெற்றியுமாகும்.


மொழி, பண்பாடு, கலாச்சாரம், பொருளாதாரம், மதம்........ என இன்றைய அனைத்தையும் மறுத்து மாறுதலைக் கம்யூனிசம் கோருகின்றது. இதைப் புரிந்து கொண்டால் பெண்ணியத்துக்காக ஒரே ஒரு போராட்ட வடிவம் கம்ய+னிசமாக இருப்பதைக் காண முடியும். இதைவிட்ட அறிவு சூனியப் "பூடகமாக" இருப்பதால் எதுவும் நடக்காது, வம்பளப்பதும் சுகிப்பதும்தான் எஞ்சும்.

மனிதனின் தோற்றம் (Origin of Man)

சார்லஸ் டார்வின் அவர்கள் இன்றைய உலகச் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். மனிதர்கள் உட்பட உயிரினங்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி ஆகியன குறித்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து அவர் ஆய்வு மேற்கொண்டார். லண்டன் லினென் சங்கத்தில் (Linean Society) தமது 27 ஆண்டுகால ஆராய்ச்சி முடிவுகளை டார்வின் வெளியிட்டபோது, பார்வையாளர்களிடமிருந்து கூச்சலும், குழப்பமுமே வெளிப்பட்டன. டார்வினின் கருத்துகளை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர்; அவரது கருத்துகள் நம்ப முடியாதவை, ஏற்றுக்கொள்ளத் தகுந்தவையல்ல எனக் கூறித் தீவிரமாக வாதிட்டனர்; டார்வினுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று ஏளனம் செய்தனர். ஆனால் இவற்றை எல்லாம் கண்டு மனம் தளராத சார்லஸ் டார்வின் தமது கொள்கைகளையும், கோட்பாடுகளையும் உறுதியுடன் வெளிப்படுத்தினார். தீவிரமாக எதிர்த்தோர் அனைவரும், தள்ளமுடியாமல் ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில், தகுந்த சான்றுகளுடனும், தாரங்களுடனும் தமது கொள்கைகளை அவர் நிறுவினார்.

இந்நிகழ்ச்சிகள் 1858ஆம் ஆண்டில் நடைபெற்றன; ஓராண்டுக்குப் பின்னர் கில்லர்ட் வைட் (Gillort White) எழுதிய நூல் ஒன்றைப் படிக்க நேர்ந்த சார்லஸ் டார்வின் வியப்பில் ஆழ்ந்து போனார். ஒவ்வொருவரும் பறவையியல் பற்றி ஏன் அறிந்து கொள்ளக்கூடாது என்ற வினா அவர் உள்ளத்தில் எழுந்தது.

சிறந்த மருத்துவராக விளங்கிய சார்லசின் தந்தையார் ராபர்ட் டார்வின் தமது மகனைத் துவக்கத்தில் புகழ் பெற்ற டாக்டர் பட்லர் பள்ளியில் (Doctor Butler’s School) சேர்த்தார். அங்கு சார்லசின் கவனமெல்லாம் வர்ஜில், ஹோமர் ஆகியோரின் கவிதைகளில் ஈடுபடவில்லை; மாறாக ஆப்பிள் பழங்களைத் திருடித் தின்பது, மீன் பிடிப்பது, பறவைகளின் முட்டைகளைச் சேகரிப்பது ஆகியவற்றிலேயே அவர் ஆர்வம் காட்டினார். ஒருமுறை வீட்டின் பின்புறம் சார்லஸ் தனது அண்ணனோடு ரகசியமாக வேதியியல் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த போது, அதைப் பார்த்துவிட்ட டாக்டர் பட்லரின் கடுஞ் சினத்திற்கு டார்வின் ஆளானார். தனது 18ஆம் அகவையில், அதாவது 1825இல் சார்லஸ் டார்வின் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள எடின்பரோவுக்கு அனுப்பப்பட்டார். மருத்துவச் சொற்பொழிவுகளிலும், அறுவைச் சிகிச்சை முறைகளைக் கற்பதிலும் அவருக்கு வெறுப்பு உண்டாயிற்று. ஆனால் அமெரிக்க வனவிலங்கு ஆர்வலர் ஆடுபென் (Auduben 1785-1851) அவர்களின் சொற்பொழிவைக் கூர்ந்து கவனித்து வந்த சார்லஸ் டார்வினுக்கு, அத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது; பாறை நீரூற்றுகளைச் சுற்றி நடப்பதிலும், மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடிப்பதிலும் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவழித்தார்.

சார்லசின் இச்செயல்களெல்லாம், அவரது தந்தைக்குப் பெரும் ஏமாற்றத்தை விளைவித்தன; பின்னர் இங்கிலாந்து திருச்சபையில் சார்லஸைப் பாதிரியாராக ஆக்குவதற்கு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கிறிஸ்து கல்லூரியில் மகனைச் சேர்ப்பித்தார். ஒரு வழியாக அப்பட்டப்படிப்பை நிறைவு செய்த சார்லஸ் டார்வின் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஊர் திரும்பிய இரண்டொரு நாட்களில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகக் கணிதப் பேராசிரியர் பீகாக் (Prof. Peacock) அவர்களிடமிருந்து சார்லசுக்குக் கடிதம் ஒன்று வந்தது. பீகிள் (Beagle) என்ற கப்பலில் இவ்வுலகம் முழுவதையும் சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்வதில் விருப்பம் கொண்ட இயற்கை ஆர்வலர்கள் சிலர் பெயரைப் பரிந்துரைக்குமாறு பேராசிரியர் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார்; இவ்வாய்வில் பங்கேற்கும் ஆர்வம் உள்ளதா எனக் கேட்டுச் சார்லசுக்குப் பேராசிரியர் கடிதம் வரைந்திருந்தார். தமது தந்தைக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை என்பதை அறிந்த சார்லஸ் மனமுடைந்து போனார்; தமது இயலாமையைக் குறித்து வருத்தத்துடன் பேராசிரியருக்கும் பதில் எழுதினார். இவற்றையெலாம் கேள்வியுற்ற சார்லசின் சிற்றப்பா, சார்லசின் தந்தையிடம் கூறி இப்பயணத்திற்கு ஒப்புக்கொள்ளச் செய்தார்.

1831ஆம் ஆண்டு திசம்பர் 21 ஆம் நாள் சார்லஸ் டார்வின், பீகிள் கப்பலில் ஆய்வுப் பயணத்தைத் துவங்கி 1836 அக்டோபர் 8இல் இங்கிலாந்து திரும்பினார். ஆய்வுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய டார்வின் புத்தறிவு பெற்றவராக விளங்கினார்; ஏராளமான ஆய்வு முடிவுகளும், உண்மைகளும் அவரது குறிப்பேட்டில் இடம் பெற்றிருந்தன. பல்வேறு புதுமைக் கண்டுபிடிப்புகளையும், பயணத்தின் போது கிடைத்த மாதிரிகளையும் சுமந்துகொண்டு டார்வின் ஊர் திரும்பினார். தென் அமெரிக்காவில் கண்ட பல்லாயிரம் ஆண்டுகட்கு முந்தைய, நான்கு கால் விலங்கு ஒன்றின் எலும்புக்கூடு, மனித இனத்தின் துவக்க காலம் பற்றிய ஐயங்களை அவர் உள்ளத்தில் தோற்றுவித்தது. இம்மண்ணுலகின் பல்வகை உயிரினங்களும் இயற்கையினது பரிணாம வளர்ச்சியின் காரணமாகத் தோன்றியவையே என்ற முடிவுக்கு டார்வின் வந்தார். பழங்காலப் பாறைப் படிவங்களில் ஆய்வு மேற்கொண்டு, பறவைகள், விலங்குகள், மனிதர்கள் உட்பட எல்லா உயிரினங்களும் பரிணாம வளர்ச்சியின் காரணமாகவே இந்நிலையை அடைந்துள்ளன என்றும், அண்டத்தில் நிகழ்ந்த மாறுதல்களின் சுழற்சியே அதற்குக் காரணம் என்றும் டார்வின் முடிவெடுத்தார்.

நீண்டகாலக் கடற்பயணம் டார்வினுக்குக் கசப்பான அனுபவங்களை அளித்தது; பல்வகைக் கடல் நோய்களுக்கு அவர் ஆட்பட நேர்ந்தது. இத்தகைய இன்னல்களுக்கு இடையிலும், கப்பலின் மேல் தளத்தில் மணிக்கணக்கில் நின்றுகொண்டு, கடல் வாழ் உயிரினங்களை ஆய்வு செய்வதில் டார்வின் தளர்ச்சியடையவில்லை. பெண்டகோனியா (Pentagonia) என்னுமிடத்தில், பனிப்பகுதி சார்ந்த மிகப் பெரும் உருவமுடைய மெகாதரம் (Megatherum) போன்ற மிருகங்களை புவியின் ஆழத்தில் கண்டு பிடித்தார். இவ்வுயிரினங்கள் பின்னங்கால்களால் நிற்கக்கூடியவை; மற்றும் கிளைகள், இலைகள் வழியே தவழ்ந்து மர உச்சிக்குச் செல்லும் ஆற்றல் கொண்டவை. தியராவின் (Tierra) அடர்ந்த காடுகளில் வாலில்லா மனிதக் குரங்கு ஒன்று தன் குட்டிக்குப் பாலூட்டுவதை டார்வின் காண நேர்ந்தது; பனிக் கட்டிகள் அதன் உடல் மீது விழுந்து உருகிச் செல்வதையும் பார்த்தார். இவற்றைக் கண்ட டார்வின் மனித உயிரினம் மற்ற விலங்கினங்களிலிருந்து வேறுபட்டதல்ல என்ற முடிவுக்கு வந்தார். கடல்வாழ் உயிரினமான நத்தைகள் கடல்மட்டத்திலிருந்து 13000 அடி உயரமுள்ள ஆண்டெஸ் (Andes) மலையின் உச்சியில் இருப்பதைக் கண்ட டார்வின் வியப்பில் ஆழ்ந்து போனார்.

தென் அமெரிக்காவின் பழங்காலப் பாறைகளைக் கண்ட சார்லஸ் டார்வின் அவர்களால், உயிரினங்களின் தொடர்ந்த, படிப்படியான மாற்றங்களுக்கான இணைப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் பயணம் செய்த கப்பல் கோலா பேஜஸ் (Gola pages) தீவுகளை அடைந்தபோது டார்வின் ஓர் உறுதியான முடிவுக்கு வந்திருந்தார்: "இவ்வுலகில் வாழும் உயிரினங்களில் தொடர்ந்து மாற்றம் நிகழ்ந்து வந்துள்ளது; மாறுதல்களுக்கு உட்படும் இவ்வுயிரினங்களே மனித இனத்தின் மூதாதையர்களாகும்" என்பதே அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாயிற்று. அத்தீவுகளில் இருந்த நத்தைகள், பல்லிகள், பல்வகைத் தாவரங்கள், பருந்து வகைகள் ஆகியன இந்நம்பிக்கையை மேலும் உறுதி செய்வதாக விளங்கின.

இவ்வாறு தாம் கண்டறிந்த மறுக்கமுடியாத பல உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு, மனிதனின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை டார்வின் எழுதத் துவங்கினார். இந்நிலையில் 1858ஆம் ஆண்டு ஆல்ஃபிரட் ரசல் வாலஸ் (Alfred Russel Wallace) என்ற அறிவியலார் ஒருவரின் கட்டுரையை டார்வின் படிக்க நேர்ந்தது. இக்கட்டுரையில் பல்லாண்டு ஆய்வுக்குப் பின் டார்வின் கூறிய பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு மிகச் சுருக்கமாகக் கூறப்பட்டிருந்தது; ஆனால் வாலசின் கட்டுரையில் இதற்கான அடிப்படைகள் விளக்கப்படவில்லை; இருப்பினும் இக்கட்டுரைக்குக் குறுக்கே நிற்க டார்வின் விரும்ப வில்லை. எனவே தமது கட்டுரை வெளியாகாத நிலையிலும் வாலசின் கட்டுரையை வெளியிடுவதற்கு டார்வின் இசைவளித்தார். இருவரின் கட்டுரைகளைப் பற்றியும் சங்கத்தினர் அறிந்திருந்தனர். எனவே இவர்கள் இருவருமே தமது கட்டுரைகளை லினென் (Linean) சங்கத்தில் வாசிக்கலாம் என அறிவித்தனர். இவ்வாறு ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டிற்கான அடித்தளம் அமைக்கப்பட்டதெனலாம். இக்கொள்கையின் திருப்புமுனையாக விளங்கிய "இயற்கைத் தெரிவின் வழி உயிரினங்களின் தோற்றம் (The Origin of Spices by Means of Natural Evaluation)" என்னும் நூலை 1859 நவம்பர் 24இல் டார்வின் எழுதி வெளியிட்டார். முதல் பதிப்பில் வெளியான 1250 படிகளும் அன்றே விற்றுத் தீர்ந்து விட்டன. இந்நூலின் கருத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஆல்ஃபிரெட் நியூட்டன் (Alfred Newton) பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டினார்; ஹென்ரி ஹக்ஸ்லி (Henry Huxley) என்னும் மற்றோர் அறிஞர் டார்வினின் தலைமை மாணாக்கராகவே மாறிவிட்டார்.

டார்வினின் கொள்கை இவ்வுலகில் ஒரு புரட்சியையே உண்டாக்கிவிட்டதெனலாம். மக்கள் தங்கள் மரபு வழிப்பட்ட நம்பிக்கைகளிலிருந்து மாறவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர்; ஆனால் அவரது கொள்கை கடும் எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டியதாயிருந்தது. 1860ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அறிவியல் முன்னேற்றக் கழகத்தின் கூட்டம் ஆக்ஸ்ஃபோர்டில் நடைபெற்றது; அதில் கலந்துகொண்ட பழமையில் ஊறிய பாதிரியார் வில்பர்ஃபோர்ஸ் (Wilberforce) டார்வினின் கொள்கையை முற்றிலும் புறக்கணித்தார். டார்வின் அக்கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவிலலை. ஆனால் ஹக்ஸ்லியை நோக்கிப் பாதிரியார் இவ்வாறு கேட்டார்: "டார்வினைப் போன்றே, உமது மூதாதையர்களும் குரங்குகளாக இருந்தவர்களா?". ஹக்ஸ்லி உறுதியாகக் கூறிய விடை இதுதான்: "வஞ்சனையும், பயனற்ற அறிவும் கொண்ட இம்மனிதர்களோடு ஒப்பிடுகையில், குரங்குகளை என் மூதாதையராக ஏற்றுக்கொள்வதில் எவ்வித அவமானமும் இல்லை." பாதிரியார் பேச ஏதுமின்றி வாயடைத்துப் போனார். காலப்போக்கில் டார்வினின் கொள்கைக்கு ஏற்பட்ட எதிர்ப்பு அடிப்படைக் காரணங்கள் இல்லாமையால் அடிபட்டுப் போனது. எனவே, டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு (Evolutionism) உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தாவரங்கள் உட்பட உலகின் எல்லா உயிரினங்களும், தொடர்ந்து பல்வகையான மாற்றங்களுக்கு உட்பட்டே தற்போதைய வடிவங்களைப் பெற்றன என்பதை டார்வின் நிரூபித்தார். இப்பரிணாம வளர்ச்சிக்கு மெதுவான, படிப்படியான இயற்கை மாற்றங்களேயன்றி எவ்விதத் தெய்வத்தன்மையும் காரணமல்ல என்பதும் அவரது கொள்கையாகும். வாழ்க்கையின் நிலைமைகளுக்கு ஏற்ப ஒத்துச் சென்ற உயிரினங்கள் வாழ்ந்தன; அவ்வாறு ஒத்துச் செல்ல இயலாத மற்றவை மறைந்தன. டார்வின் தமது இக்கொள்கைகளையெல்லாம் "இயற்கையின் தெரிவுமுறை (Natural Selection)", தகுதியுள்ளவற்றின் தொடர் வாழ்க்கை (Survival of the Fittest)" என்னும் இரு தலைப்புகளில் வெளியிட்டார்.

டார்வின் அவர்களின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை இன்று உலகில் மிகுந்த நம்பிக்கையோடு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மரபியல் (Genetics), கருவியல் (Embryology) மற்றும் புதைபொருள் ஆய்வியல் (Palaeonology) ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பரிமாண வளர்ச்சிக் கொள்கைக்கு மேலும் வலுவூட்டின. தொல்பழங்காலத்தில் இவ்வுலகம் முழுதும் சடப்பொருளாயிருந்து, பின்னர் அதிலிருந்தே மனிதர் உட்பட எல்லா இயற்கை உயிரினங்களும் மலர்ந்தன என்ற உண்மை புலப்பட்டது.

இயற்கையின் தெரிவுமுறை சுற்றுச்சூழலைப் பொறுத்தது என்பதை டார்வின் மிகத் தெளிவாக வலியுறுத்தினார். ஒரு பச்சைநிற வெட்டுக்கிளியை மஞ்சள் நிறப் புல்வெளியில் விட்டால் அது எளிதில் பறவைகளுக்கு இரையாகிவிடுகிறது; ஆனால் பச்சைப்புல் வெளியில் விடும் போது அவ்வெட்டுக்கிளி காப்பாற்றப்படுகிறது. இச்சோதனை வாயிலாக சுற்றுச்சூழலின் வலிமையை நிரூபித்தார்.

அடுத்து மெண்டலின் விதிகளும் (Mendel's Laws), தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் பரிணாம வளர்ச்சிக் கொள்கையைப் புரிந்து கொள்ள பெரிதும் துணை நின்றன. பயறு வகைச் செடிகளில் ஆய்வு மேற்கொண்ட மெண்டல் வியப்பூட்டும் முடிவுகளைக் கண்டறிந்து வெளியிட்டார். ஏற்கனவே பெட்டாசன், திப்ராய் ஆகியோர் இத்துறையில் ஆய்வுகள் நடத்தியபோதும் அவர்களால் இயற்கையின் தெரிவு முறை பற்றி ஐயத்திற்கிடமின்றி முடிவுகளை வெளியிட இயலவில்லை. ஆனால் மரபியல், குரோமோசாம்கள், மரபணுக்கள் ஆகியன பற்றிய மெண்டல் விதிகளுக்கான அடிப்படைகளை மோர்கோன் அவர்கள் தெளிவுபடுத்தி ஐயங்களைப் போக்கினார்.

பெற்றோரின் மரபியற் குணங்கள் பிள்ளைகளிடம் அல்லது அவர்களது வழித்தோன்றல்களிடம் இருப்பது பாலில் நீர் கலந்திருப்பது போன்றதாகும் என டார்வின் கருதினார். அது மட்டுமல்லாமல் இந்த அண்டத்தில் வாழும் பல்வகைப்பட்ட உயிரினங்களுக்குள், வேற்றுமைகளுக்கிடையில் பல ஒற்றுமைகளும் உள்ளன என்பதும் அவரது கருத்தாகும்

Friday, October 24, 2008

தாய்ப்பால் கொடுத்தால் மார்பக புற்றுநோய் வராது

தாய்ப்பாலின் மகிமை பற்றி இன்னும் சில தாய்மார் களுக்கு தெரியவில்லை. தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறைந்து விடும் என்று நினைக்கும் பெண்கள் இருக் கத்தான் செய்கிறார்கள்.

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பிற்காலத் தில் அந்த குழந்தை நல்ல ஆரோக்கியத்துடனும் சுறு சுறுப்பாகவும் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இப்போது தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார் களுக்கு மார்பக புற்று நோய் வருவதை தடுக்க முடியும் என்பதை டாக்டர்கள் தங்கள் ஆய்வு முடிவில் தெரிவித்து இருக்கிறார்கள். குழந்தைக்கு 1 வருடமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதன் பிறகு ஓரளவு குறைவாக தாய்ப்பால் கொடுக்கலாம்.

இதன் முலம் மார்பக புற்று நோயை உருவாக்கும் ஹார்மோன்களின் அளவு கணிசமாக குறைகிறது. மார்பக செல்களில் மரபணு (டி.என்.ஏ.) சேதம் அடை வதை தடுக்க முடியும் என்றும் ராச்சல் தாம்சன் என்ற பெண் டாக்டர் பல்வேறு பெண்களிடம் நடத்திய ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளார்

Monday, October 20, 2008

உலகெங்கும் உணவு நெருக்கடிக்கு உச்சிமாநாடுகள்; ஆனால் உண்பதற்குக் கிடைப்பது அரைவயிறு உணவே


செல்வந்த நாடுகள் துரித கதியிற் செயற்படாதவிடத்து உலகின் ஒரு பில்லியன் வறிய மக்கள் இரண்டு பில்லியனாக அதிகரிக்கும் நிலை உருவாகும்
உணவுக்கான உச்சிமாநாடுகளின் பின்னர் ஒன்று 1996 இல், மற்றையது 2002 இல் சர்வதேசச் சமூகம் பட்டினியைக் குறைத்து சத்துணவின்மையையும் அகற்றுவதாக வாக்குறுதியளித்தது.

1974 இல் உணவு சம்பந்தமாக நடைபெற்ற உலக மாநாட்டில் ஒரு தசாப்த காலத்திற் பட்டினியை ஒழித்துக்கட்டுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் மூன்று ஐ.நா மகாநாடுகளிலும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் பலன்தரவில்லை. இரண்டு உச்சிமாநாடுகளிலும் உலகத் தலைவர்களே இவ்வுத்தரவாதங்களை வழங்கினர்.

30 நாடுகளில் உணவு சம்பந்தமான கிளர்ச்சிகள் வெடித்துள்ள நிலையிலும் 60 க்கு மேற்பட்ட நாடுகளில் அரிசி, தானியப் பற்றாக்குறை நிலவும் நிலையிலும் 150 நாடுகளின் தலைவர்களை உள்ளடக்கிய 3 ஆவது உலக உச்சிமாநாட்டில் வியாழனன்று தலைவர்கள் இந்த நெருக்கடியைக் கையாள அவசரமானதும், ஒழுங்கமைக்கப்பட்டதுமான நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் வழங்கியுள்ளனர்.

யூ.என்.செயலாளர் நாயகம், பான்கி மூன் ரோமாபுரி உச்சி மகாநாட்டில் உணவுப் பற்றாக்குறையைப் பற்றிக் கூறும்போது "வைபீறியாவில், அண்மைக்காலத்தில் அரிசியை மூடைக்கணக்கில் வாங்கிய மக்கள் இப்போது கிண்ண அளவில் வாங்குபவர்களை நான் சந்தித்துள்ளேன்' என்றார்.

இந்த மகாநாட்டிற் கேட்ட பேரொலி யாதெனில் சர்வதேசச் சமூகத்தின், விசேடமாக செல்வந்த நாடுகளின் அரசமைப்புக்களை இந்த நெருக்கடிக்கும் தீர்வுகாணவேண்டிய தேவையுள்ளது என்பதை அழுத்தமாக விளங்கவைக்க வேண்டும் என்பதாகும்.

"நாங்கள் துரிதகதியிற் செயற்படாதவிடத்து உலகின் ஒரு பில்லியன் வறியமக்கள் இரண்டு பில்லியன்களாக அதிகரிப்பர். ஏனெனில் அவர்களது பொருட்களை வாங்கும் பணத்தகுதி உணவு, எரிபொருட்களின் விலை இரட்டித்ததனால் அரைவாசியாகக் குறைந்துள்ளது' என்கிறார் . பசி,பட்டினியால் வருந்துபவர்களுக்கு உதவும் யூ.என். ஏஜென்சியின் நிர்வாகப் பணிப்பாளர் ஜோசெற்ஷிறான்.

உலக உணவுத்திட்டம் இந்த வருடம் அது 78 நாடுகளைச் சேர்ந்த 90 மில்லியன் மக்களுக்கு 5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான உணவு உதவியைச் செய்யவுள்ளதாகக் கூறுகிறது. இந்த நாடுகளுள் அதிகம் பாதிக்கப்பட்டனவான ஹெயிற்றி, ஆப்கானிஸ்தான், சோமாலியா, எதியோப்பியா, கென்யா ஆகியன அடங்கும்.

உரோமாபுரியைத் தளமாகக் கொண்ட உணவு, விவசாய நிறுவனத்தின் அனுசரணையில் 3 நாட்களாக நடைபெற்ற உச்சிமகாநாடு பிரகடனப்படுத்துவதாவது; உலகளாவிய ரீதியில் பட்டினிக்கும், போஷாக்கின்மைக்கும் எதிராகப் போராடும் பயபக்தியான பிரகடனம். ஆனால் இறுதியில் இதில் எவ்வளவு வீதம் நடைமுறைப்படுத்தப்படும்?

இந்தப் பிரகடனத்துடன் தளம்பல் நிலையிலுள்ள எண்ணிக்கையும் வெளிவந்தது. செயலாளர் நாயகம் உச்சி மாநாட்டில் கூறியதுபோல உறுதியான புதியவளங்கள் தேவைப்படுகின்றன. அல்லது உலகளாவிய இந்த நெருக்கடியைத் தீர்க்க வருடமொன்றிற்கு 1520 பில்லியன் டொலர்களும் மேலும் ஆபிரிக்காவில் பசுமைப் புரட்சியின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வருடந்தோறும் 810 பில்லியன் டொலர்களும் தேவைப்படும்.

சான்பிரான்சிஸ்கோவைத் தளமாகக் கொண்ட ஒக்லன்ட் மன்றத்தின் நிர்வாகப் பணிப்பாளர் அனுறாதா மிற்றால் ஐ.பி.எஸ்.ஸிற்குக் கூறியதாவது: முதற் பார்வையில் உச்சி மகாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட உத்தரவாதங்கள் நம்பிக்கையூட்டுவன.

அவர் கூறுவதாவது: உணவு நெருக்கடியினாற் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உடனடியாக உதவிகளுக்கும், கொள்ளை சிபார்ஸுகளுக்கும் அழைப்புவிடுப்பது. மேலும் இவற்றுள் சிறுவிவசாயிகளுக்கு உதவி, சமூகப் பாதுகாப்பு வலுப்படுத்தல், உணவு சேமித்துவைத்தல், ஆபத்து வேளைகளில் உதவக்கூடிய செயன்முறைகள் ஆகியனவும் உள்ளடக்கப்படுதல் போன்றனவற்றிற்கு அழைப்பு விடுத்தல் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்கிறார்.

அதேவேளையில், மத்திம,நீண்டகாலச் சிபார்ஸுகள், விவசாயத்திற்கு மக்களை மையமாகக் கொண்ட கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியனவும் உணவுப்பற்றாக்குறையை நீக்க உதவும் எனவும் அவர் கூறுகிறார்.

மிற்றால் மேலும் கூறுவதாவது: "அண்மைக்கால உணவு விலை நெருக்கடியும், அதிகரிக்கும் பட்டினி நிலையும் சர்வதேசச் சந்தையில் பொருட்கள் வர்த்தகம் செய்யப்படுதல் என்பதற்குப் பதிலாக புதிய விவசாய, உணவுக்கொள்கையின் தேவையொன்றை வேண்டி நிற்கிறது. இதற்கு மூன்றாவது உலக நாடுகளுக்கு உணவு நிறைவை உறுதிப்படுத்த உறுதியான கொள்கையொன்று அவசியமாகிறது.

மேலும் மூன்றாவது உலகநாடுகள் சர்வதேச நிதி நிறுவனங்களின் தவறான வழிநடத்தல்களிலிருந்து விலகிக்கொள்ளும் திறமையும் அவசியமாகிறது.

சிறுவிவசாயிகளை மையமாகக் கொண்டு ஒரு விவசாய முறையை உருவாக்குவது. விவசாய தொழிலாளர்கள், மீனவர்கள், உள்நாட்டுச் சமூகங்கள் ஆகியவர்களை அடிப்படையாகக் கொண்டு உணவு நிறைவையும், நாடுகளின், உணவுக்கான சுயதேவைப் பூர்த்தியையும் உறுதிப்படுத்துவது என்பது பற்றியதும் ஆகும்.

சர்வதேசச் செயற்பாடு, ஏற்கனவே உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்கிறது எனப் பான் கூறினார்.

உணவு விவசாய நிறுவனம் குறைந்த வருமானமுள்ள நாடுகளுக்கு விதைகள், வேறு விவசாய உதவிகளைச் செய்தற் பொருட்டு 1.7 பில்லியன் டொலர்களுக்காக அழைப்புவிடுத்துள்ளது.

இந்த வருடத்திற்கான உத்தரவாதங்களை நிறைவேற்ற உலக உணவு நிறுவனம் சவுதி அரேபியாவிடம் இருந்து 755 மில்லியன் டொலர்களைப் பெற்றுள்ளது.

உணவு, விவசாய நிறுவனம் மேலதிகமாக 200 மில்லியன் டொலர்களைப் பாதிக்கப்பட்ட நாடுகளில் வறிய கமக்காரர்களுக்குக் கொடுக்கிறது.

மேலும் உலகவங்கி 1.2 பில்லியன் டொலர் நிதி வசதியை உருவாக்கி உணவு உற்பத்தியைப் பெருக்க உதவ முன்வந்துள்ளது. இதில் 200 மில்லியன் டொலர்கள் உலகின் மிகவறிய நாடுகளுக்கு உதவுவதற்காகும்.

ஐக்கியநாடுகள் சபையும் சி.ஈ.ஆர்.எவ். நிதியத்திலிருந்து அதிகரித்துவரும் உணவுப் பொருட்களின் விலையினால் பாதிக்கப்படும் மக்களுக்கான மனிதாபிமானத் தேவைகளுக்காக 100 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.

அவர் மேலும் கூறியதாவது, வளர்ந்துவரும் நாடுகள் தமது விவசாயப் பகுதியில் இன்னும் அதிகளவு நஷ்டத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றும், அவை தற்போதைய நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும், மற்றும் சிறு விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்தும் வலுவையும் கட்டுப்படுத்தி விடுமென்றும் கூறினார்.

தற்போதைய உணவு நெருக்கடியை எதிர்கொள்ள முடியாத நிலை மூன்று தசாப்தகாலமாக விவசாயத்தில் காட்டப்பட்ட சந்தை ஒழுங்கின்மையைத் தெளிவாகக் காட்டுகிறது.

மிற்றால் கூறுவதாவது: ஆகவே உணவு உற்பத்தியை ஸ்திரப்படுத்தவும், தகுந்த முறையில் உணவை நியாயமான விலையில் உலகளாவிய ரீதியில் விநியோகிக்கவும் நல்ல தீர்வுகளைக் காணுமாறு அழைப்புவிடுக்கிறோம்.

அதேவேளையில் 237 அரசசார்பற்ற நிறுவனங்களும், தொழிற்சங்கங்களும், சமூக அமைப்புக்களும், ஏறக்குறைய 50 நாடுகளிலிருந்து பங்கேற்றுள்ளன. அவை உலக வர்த்தக நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பஸ்கால்லாமியை வானளாவும் உணவுப் பொருட்களின் விலைக்கான விடை உணவு உற்பத்தி, வர்த்தகம் மேலும் ஒழுங்கீனம் ஆக்குவதிற் தங்கியிருக்கவில்லை என எச்சரித்துள்ளன.

அக்கடிதம் டோகா செயற்பாடுகள் உலக உணவு முறையை எதிர்நோக்கும் பாரிய சவால்களை நிர்ணயிக்கவில்லை. அது காலநிலை மாற்றத்தையும், இயற்கை வளங்கள் குறைதல், எரிபொருட்களின் விலை நாலுமடங்காதல், வர்த்தக சந்தையில் போட்டியின்மை, பயோ எரிபொருள்கள் அதிகரித்தல் என்பனவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

இதிற் கையொப்பமிட்டவர்கள் அக்ஷன் எயிட் இன்ரர் நாஷனல், ஆபிரிக்கா வர்த்தக வலைப்பின்னல், ஏஷியன் பெசன்ற் கொயலிஷன், ஒக்ஸ்பாம், ஒக்லன்ட் மன்றம் எல்.ஏ.சி.ஆர்.எம்.தேட்வேள்ட் நெற்வேக், பூமியின் நண்பர்கள் பூட்ஸ்பான் ஆகியவையாகும்.

நிதி மூலதனம் உற்பத்திகளையே உறிஞ்சுகின்றது


நிதி மூலதனம் உற்பத்தியையும் உறிஞ்சுவதால், உற்பத்திக் கூறுகளே அழிகின்றது. இந்த நிதி மூலதனத்தை படைக்கும் உற்பத்தியோ உழைப்பிலானது. நிதி மூலதனம் பெருத்து வீங்குவது, அதன் இருப்புக்கான விதி. தனது ஒழுக்கக்கேடான இருப்பு சார்ந்து, உற்பத்தியையும் உழைப்பையும் உறிஞ்சிவிடுகின்றது. உற்பத்தியும், உழைப்பும் வெறும் சடலங்களாக மாறிவிடுகின்றது. அது செயலிழந்து நலிந்து போகின்றது.

இப்படி நடமாடும் இந்த பிசாசுகளின், மிக அண்மைய காலத்தைய வரலாறு என்ன? நாடுவிட்டு நாடு கடக்கும் வங்கி தொழில், 1960இல் மொத்த உலக உற்பத்தியில் 1 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. இது 1980இல் 20 சதவிகிதமாக அதிகரித்தது. அதை பாதுகாக்க, விரிவாக்க, சூறையாட உருவாக்கப்பட்டதுதான் உலகமயமாதல்.

இப்படி எதார்த்தத்தில் நிதி மூலதனம், பெருமெடுப்பில் சூறையாடுவதற்காக உற்பத்திக்கு வெளியில் குவிந்துவிடுகின்றது. இப்படி நிதி மூலதனம் உற்பத்தியில் ஈடுபடுவதிலும் பார்க்க, அதிக இலாபத்தை பெறும் வக்கிரத்தால் சூல் கொண்டு நிற்பதால், போட்டி அதிகரிக்கின்றது. உற்பத்தி மீதான மூலதனத்தின் பங்கை வாங்கும் சூதாட்டத்திலும் இறங்குகின்றது. வட்டித் தொழிலும் அத்துடன் உற்பத்தி மூலதனத்தை வாங்கி அதை உறிஞ்சிய பின் துப்பிவிடுகின்றது.

பங்கு என்ற இந்தச் சூதாட்டத்தில், வீங்க வைத்து வெம்ப வைத்துதான் நிதி மூலதனம் இலாபத்தைச் சம்பாதிக்க முடியும் என்ற நிலை. பங்குகள் தலைகால் தெரியாத வேகத்தில் ஓடும் போது, நிதி மூலதனம் பெருமெடுப்பில் வந்து குதிக்கின்றது. இதுவே மிகப் பெரிய உலகச் சூதாட்டங்களில் ஒன்றாகிவிடுகின்றது.

உலகின் பங்கு பத்திரச் சந்தை 1970இல் 1,00,000 கோடி டொலராக மட்டும் இருந்தது. இது 1980இல் 2,00,000 கோடி டொலராகியது. 1990இல் 12,00,000 கோடி டொலராகவும், 1995இல் 20,00,000 கோடி டொலராகவும், 1998இல் 25,00,000 கோடி டொலராகவும் அதிகரித்தது. 1970இல் இருந்தைவிட 25 மடங்காக பெருகியது. இந்த நிதி சூதாட்டம் மூலம் சம்பாதித்தல் என்பது, உற்பத்தியானதல்ல. இழப்பு என்பது அதன் விதி. இங்கு உழைப்பு பயன்படுத்தப்படுவதில்லை. சேமிப்புகள், உற்பத்திகள்தான் சூறையாடப்படுகின்றது. மறைமுகமாக சுற்றுவழிகளில் மனித உழைப்பு உறிஞ்சப்படுகின்றது. இது திவால் உற்பத்தியை மட்டுமல்ல, உழைப்பையும் இல்லாதாக்குகின்றது.


மறுபக்கத்தில் நாட்டை சுற்றி வளைத்து விற்றல். அதாவது நேரடிக் கடனுக்கு பதிலாக, பத்திரங்கள் விற்கப்படுகின்றன. இப்படி 1996இல் உலகளாவில் விற்கப்பட்ட பத்திரங்கள் பெறுமதி 5,30,000 கோடி டொலராகும். இது நாட்டை பகுதிபகுதியாக நிபந்தனை இன்றி விற்பதற்கு வழி செய்கின்றது. பெருமளவிலான நிதி, தமக்கு இடையில் கடுமையான போட்டியுடன், ஒன்றையொன்று விழுங்கும் ஒழுக்கக்கேட்டுடன்தான் இயங்குகின்றது. தன்னை பெருக்குவது என்ற பிசாசுத்தனத்துடன், தனக்கு கீழ் அனைத்தையும் மாற்றி விடுவதற்கு முனைகின்றது.


இப்படி உலக மக்களின் சிறு சேமிப்புகளையும், உழைப்பின் மிச்சமீதங்களையும் கொள்ளையிடுவதை தவிர வேறு வழி கிடையாது. சூதாட்ட விடுதிகளில், அதிக அளவிலான கனவுகளுடன் எப்படி பணத்தைப் போட்டு இழக்கின்றனரோ, அதேபோல் பங்குப் பத்திரத்திலும் அன்றாடம் நிகழ்கின்றது. இந்தச் சூதாட்டம் என்பது, அதை இழப்பதை அடிப்படையாகக் கொண்டது. பங்குச் சந்தை என்பதே மற்றவன் பணத்தை திருடும் பகிரங்கமான சூதாட்ட மையம்.


இந்தப் பணம் ஏகாதிபத்தியங்களில் இருந்துதான் பெருமளவில்பாய்கின்றது. அங்குதான் செல்வம் குவிந்து வருகின்றது. உலகளாவிய பணத்தின் இருப்பு தான், பங்குச் சந்தையையும் ஆவியாக இறங்கி உறிஞ்சுகின்றது.


உலக அளவில் பணம் வைப்பு எந்த பணத்தில் உள்ளது என்பதைப் பார்த்தால், அதன் சூறையாடு திறனையும் இனம் காணமுடியும். (தற்போது ஈரோ)




1975- 1992 1992
டொலர் 69.1 64.4
ஜப்பான் யென் 5.6 8.3
ஜெர்மனிய மாக் 13.1 13.2
பவுன், பிராங், சுவிஸ் பிராங் 7.2 8.4
மற்றையவை 4.9 5.5


சர்வதேச நிதி என்பது, ஏகாதிபத்திய நலனுக்கு இசைவானது மட்டுமல்ல, அவர்களின் பணத்திலும் உள்ளது. இது நிதி மூலதனத்தைக்கொண்டு உலகைச் சூறையாட வசதியாகவும், வாய்ப்பாகவும் மாறிவிடுகின்றது. மூன்றாம் உலக நாடுகளின் கையிருப்புகள் கூட ஏகாதிபத்தியப் பணத்தில் வைத்திருப்பது என்பதே, இங்கு விசித்திரமான உண்மை.


உதாரணமாக ஆசிய மத்திய வங்கி தனது சேமிப்பின் 70 சதவிகிதத்தை அயல் நாட்டு நாணய சேமிப்பு நிலையங்களில் வைத்துள்ளது. இதன் மொத்தத் தொகை 1,70,000 கோடி டொலராகும். இந்த நிதியை அமெரிக்காவின் கடன் பத்திரங்களில் முதலிடுகின்றனர். அதாவது நிதியில் 80 முதல் 90 சதவிகிதத்தை இதற்காக செலவு செய்துள்ளனர். பத்திரப்பங்கான சூதாட்டத்தில் இடும் இவர்கள், கடனை அடைத்து நாட்டைப் பாதுகாக்க பயன்படுத்துவதில்லை.


டாலரின் சரிவும், கடனை மீளப் பெறத் தூண்டும் போது, கடன் பத்திரம் திவõலாகிவிடும் என்பதே உண்மை. அமெரிக்கா இந்த நிதியைத் தர முடியாது என்று அறிவிக்கும் பயங்கரமும் நிகழும், நிகழ்கின்றது. வெளிநாடுகளின் நாணய கையிருப்பில், 73 சதவிகிதம் டொலரிலேயே இருந்த அபாயம், கத்தி முனையில்தான் உலகை நடக்க வைத்தது. தொடர்ச்சியான சர்வதேச நெருக்கடிகள், தொடர்ச்சியான ஏகாதிபத்திய முரண்பாடுகள், டொலரின் சரிவு என்பன, மாற்று (ஏகாதிபத்திய) நாணயத்தில் பணத்தை வைத்திருப்பதை தூண்டியது. இருந்தபோதும் டொலர் தான், நிதியின் மொழியாக அதன் ஆன்மாவாக இன்றும் நீடிக்கின்றது.


இப்படிப்பட்ட நிதி மூலதனம் உற்பத்திக்கு வெளியில், உற்பத்தியை உறிஞ்சி சூறையாடுகின்றது. உற்பத்திக்கான சகல அடிப்படைகளும் தகர்க்கப்படுகின்றன. நிதி மூலதனத்தின் சூறையாடலுக்கு இசைவாக, உற்பத்தி மூலதனம் ஈடுகொடுக்க முடியாது நெருக்கடிக்குள்ளாகின்றது. யார் உழைப்பில் இருந்து அதிகம் சூறையாடுவது, என்ற வெறி புதிய போக்காகியுள்ளது. உற்பத்தி மூலதனம், கடுமையான நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது.


நிதி மூலதனம் வீங்கி நிற்கின்றது. பெருமளவில் நிதியைத் திரட்டி வைத்துக் கொண்டு, அடங்காப் பசியுடன் அலைகின்றது. இப்படி 1995இல் நாள்தோறும் 90,000 கோடி டொலர் உற்பத்திக்கு வெளியிலான, பணப்புழக்கத்தில் ஈடுபட்டது. இது 2003இல் 3,00,000 கோடி டொலராகியது. இப்படி உற்பத்திக்கு வெளியில் நாள்தோறும் நிகழும் பணப்புழக்கத் தொகை 2,00,000 முதல் 3,00,000 (2 முதல் 3 டிரில்லியன்) கோடி டொலராக மாறியது. லண்டன் ஈரோ டாலர் சந்தையில் நாள் ஒன்றுக்கு புரளும் நிதியோ, 30,000 கோடி டொலராகியது. வருடம் இது 75,00,000 (75 டிரில்லியன்) கோடி டொலராகியது. உலகில் நாள் ஒன்றுக்கு நிதி மாற்றப்படும் தொகையோ 15,000 கோடி டொலராகவுள்ளது. வருடம் 38,00,000 (38 டிரில்லியன்) கோடி டொலராகவுள்ளது.


ஐரோப்பிய ஏகபோக வங்கிகள் கொடுக்கல் வாங்கல் மூலம் நாள் ஒன்றுக்கு 3,00,000 கோடி டொலரை, அதாவது வருடம் 7,50,00,000 கோடி டொலரை (750 டிரில்லியன்) கையாளுகின்றது. இது உலக வர்த்தகத்தைப் போல் 25 மடங்கு அதிகமாகும். இது போல் அன்னியச் செலாவணி சந்தையில் நாள் ஒன்றுக்கு 1,50,000 கோடி டொலரை கையாளுகின்றது. அதாவது வருடம் 3,50,00,000 கோடி (350 டிரில்லியன்) டொலராகும். இது உலகப் பொருள் மற்றும் சேவைத்துறை போல் 12 மடங்கு அதிகமாகும்.


நிதி மூலதனம் இப்படி உலகைச் சூறையாடுவதில் காட்டுகின்ற தீராத காதல், சமூகத்தை மலடாக்கி அது கொழுக்கின்றது. உற்பத்தி மூலதனம் உருவாக்கும் உழைப்பைச் சூறையாட, இதற்கு வெளியிலான இந்த நிதி மூலதனம் அன்றாடம் இயங்குகின்றது. இது தன்னை இந்த வழிகளில் பெருக்கிக் கொள்வதால், நிதி மூலதனத்தின் இயக்கம் என்பது உயிர்க்கொல்லியாக மாறிவிடுகின்றது.
இது போலியான வடிவில் கூட தன்னை நிலைநிறுத்தி சூதாட்டத்தில் இறங்கி விடுகின்றது. இப்படி போலியான நிதி மூலதனம் 25,00,000 கோடி டொலராகும். அதாவது வருடம் 62,50,00,000 கோடி (6,250 டிரில்லியன்) டாலர் போலியாக சூதாட்டத்தில் உள்ளது. ஆனால் உலக வருடாந்த வாணிபம் 1,00,00,000 கோடி (100 டிரில்லியன்) டொலர் மட்டுமேயாகும். போலியாக நிதி மூலதனம் 62 மடங்கு மேலாக இயங்கி, சூதாட்டத்தை நடத்துகின்றது. வர்த்தகம் என்பதே உண்மைப் பணமற்ற, போலியான சுழற்சிக்குள் நடத்தப்படுகின்றது. அசல் எது? போலி எது? என்பது இனம் காணமுடியாத வகையில், நிதிமூலதனமே போலியாகிவிட்டது.


மற்றொரு உண்மை, இந்த உலக அமைப்பின் இழிநிலையை தெளிவாகவே பறை சாற்றுகின்றது. அதாவது உலகில் நாள்தோறும் கைமாறும் 7 டொலரில் 1 டொலர் தான் வர்த்தகத்திற்கு பயன்படுகின்றது. அத்துடன் நாள்தோறும் 1,20,000 முதல் 1,50,000 கோடி டொலர், உற்பத்தி அல்லாத துறையில் கைமாற்றப்படுகின்றது. எப்படிப்பட்ட ஒரு உலக ஒழுங்கு?


உலகில் ஏழு டொலருக்கு ஒரு டொலர்தான் வர்த்தகத்தில் ஈடுபடும் போது, ஆறு டொலர் மனித இனத்துக்கு எதிரான வகையில் மற்றொரு தளத்தில் செயலாற்றுகின்றது. இப்படி பெரும் தொகையிலான சூறையாடல் என்பது, உலகமயமாக்கலின் உச்சக் கொப்பளிப்பாகும். இந்த நிதி மூலதனத்தின் அனைத்து விதமான செயற்பாடும், உழைப்பின் மீது தான் நடத்தப்படுகின்றது. மனித உழைப்புதான் செல்வம். அந்தச் செல்வத்தை அடைவது, எந்த வழியாகவும் இருக்கலாம். ஆனால் அதன் ஒழுக்கக்கேடு என்பது சூறையாடுவது தான்.


போலியான சூழ்ச்சியை நிதி மூலதனம் மூலம் கட்டமைக்கின்ற உலகமயமாதலின் உண்மை நிலவரமோ பயங்கரமானது. 2001இல் உலகளாவிலான உள்நாட்டு உற்பத்திகளின் மொத்தப் பெறுமதி 31,00,000 கோடி (31 டிரில்லியன்) ஈரோ மட்டும் தான். இதில் ஏற்றுமதி இறக்குமதி 13,00,000 கோடி (13 டிரில்லியன்) ஈரோக்கள் தான். ஆனால் உற்பத்தி சாராத (ஈடுபடாத) பணமாற்று மட்டும் 3,60,00,000 கோடி (360 டிரில்லியன்) டொலராக இருந்தது. நடப்பது போலியான பொய்யான சூதாட்ட மூலம் சம்பாதிப்பது. உற்பத்திக்கு வெளியில் வெறும் பேப்பர் பொருளாதாரம் ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ளது. உண்மையான நிதி மூலதனம் இல்லாமலேயே, உண்மையான பொருட்களும் இல்லாமலேயே ஒரு போலியான வர்த்தகம் நடத்தப்படுகின்றது. இது உலக உழைப்பின் வளத்தை உறிஞ்சி, அதன் மேல் சொகுசாகவே இயங்குகின்றது. இதுவே குமிழிப் பொருளாதாரமாகி, வீங்கி வெம்பி மிதக்கின்றது.


உற்பத்தியை விட பல மடங்காக, உழைப்பை விட பற்பல மடங்காகி, இது வீங்கி வெம்பிப் போய் நிற்கின்றது. உழைப்பிலான உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையில் இந்த போலியான பணமாற்றுகள் இயங்குகின்றது. சூறையாடப்படுவது இதற்குள்தான். இதனால் முதலாளித்துவத்தின் உண்மை பெறுமானத்தில் கூட, நுகர்வோருக்கு பொருட்கள் மூலம் கிடைப்பதில்லை.


நிதி மூலதனம், அதனுடன் சேர்ந்து இயங்கும் போலியான நிதி மூலதனத்தின் இருப்பு என்பதும், அதன் வாழ்வு என்பதும், மனித உழைப்பின் மீதான அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு உழைப்பைச் சூறையாடுவதுதான். சுதந்திரம், ஜனநாயகம் என்பது இந்த அர்த்தத்தில் மட்டும்தான், ஒரு சமூக அடிப்படையாகவும் சமூக ஒழுங்கை நிர்ணயிக்கின்ற காரணியாகவும் உள்ளது