ஜாதி வேற்றுமை" பெண்ணை ஒடுக்கும் விதிமுறைகள் ஆகியவற்றைப் போதிக்கும் மனுதர்மம் என்ற நூலை எதிர்த்துப் போராடுவதில் மட்டுமே தலித்தியமும் பெண்ணியமும் ஒன்று சேர்கின்றது. மற்ற எல்லா பரிணாமங்களிலும் பெண்ணியமும் தலித்தியமும் வௌவேறு போராட்டங்கள்"67 என்று ஏழுதுகின்றார் ஆனால் எப்படி என விளக்கவில்லை.
மனு தர்மம் என்ற நூலை எதிர்த்து எப்படி பெண்ணியம் போராடும் ஐயா? பார்ப்பனியப் பெண்ணியம் அதாவது அ.மார்க்ஸ் குறிப்பிடும் "மிருதுளா சின்கா" எப்படி மனுதர்மத்தை எதிர்க்கும். அ.மார்க்ஸ் என்ற அறிவியல் ஆய்வாளர் பெண்ணியத்தை வரையறுப்பது கேலிக்குரியது என்கின்றார். நீங்கள் எந்தப் பெண்ணியத்தைச் சொல்லுகின்றீர்கள். கேலி செய்யும் பெண்ணியத்தையா? எதை?
மனுதர்மப் பெண்ணியத்தை எதிர்க்க வேண்டுமாயின் அது உண்மையான பெண்ணியமாக இருக்கவேண்டும். அது ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து சுரண்டலை, ஆணாதிக்கத்தை, மற்ற பூர்சுவா மற்றும் பார்ப்பனியப் பெண்ணியத்தை எதிர்த்தும், சாதி அமைப்பைக் கடந்தும் போராட வேண்டும். இந்தப் பெண்ணியம் தான் மனுதர்மத்தை எதிர்க்கும். இந்தப் பெண்ணியம் கம்யூனிசப் பெண்ணியமாகும்.
அடுத்து தலித்தியம் மனுதர்மத்தை எதிர்க்கும் என்கின்றார். இது முழுமையானது அல்ல. தலித்தியம் மனு தர்மத்தை எதிர்க்க வேண்டுமாயின், தனக்கு உள்ளேயுள்ள மனுதர்ம வழிவந்த சாதிப்படி நிலையை முதலில் தகர்க்க வேண்டும். இதைத் தலித் மனுதர்மம், மறுக்கின்றது. இது மறுக்கப்படும் போது மிக கீழ் மட்ட சாதிக்கு இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? எல்லாம் ஒன்று தான்.
மனுதர்மத்தை எதிர்த்துப் போராட வேண்டும் எனின் தலித்துக்குள் உள்ள மனுதர்மக் கூறுகளை எதிர்த்துப் போராடுவதில் தொடங்குகிறது. தலித்துகளுக்குள் உள்ள மனுதர்மத்தைப் பாதுகாத்த படி ஒருக்காலும் வெளியில் உள்ள மனுதர்மத்தைத் தகர்க்க முடியாது. மனுதர்மத்தை எதிர்த்த போராட்டம் எல்லாம் சாதிப்படி நிலை ஒடுக்குமுறைக்குள்ளும் தொடங்குகின்றது. இது சாதியைக் கடந்த போராட்டத்தைத் தொடங்குவதும், ஒடுக்கப்பட்ட மக்களின் மற்ற அனைத்துக் கோரிக்கைகளிலும் கைகோர்க்கின்றது. அப்போது மட்டும் தான் மனுதர்மத்தை ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் வேரறுக்கின்றன.
சாதியைக் கடந்து கோரும் மக்கள் தான், அதாவது பாட்டாளி வர்க்கம் தான் ஒட்டு மொத்த மனுதர்மத்திற்கு எதிராகப் போராடுகின்றது. அதை வேர் அறுக்கின்றது. மற்றவை அதைத் தக்க வைக்கவும், அ.மார்க்ஸ் கோருவது போல் சலுகைகளைக் கையேந்துவதிலும் தான் நீடிக்கின்றது.
அடுத்து அரவிந் அப்பாத்துரையின் பொன் மொழியைப் பார்ப்போம். "தத்துவரீதியில் கம்ய+னிசம் என்பது சம உரிமைக்கான போராட்டம். இது முக்கியமான பொருளாதார, சமத்துவத்திற்கான போராட்டம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ......மார்க்சியவாதிகள் பெண்ணியப் போராட்டத்தில் பங்கு பெறுவோருக்குத் துணை நிற்கக் கூடும். இதைத் தவிர்த்து கம்யூனிசத்திற்கும் பெண்ணியப் போராட்டத்திற்கும் என்ன நேரடித் தொடர்பு இருக்கின்றது என்பது ஒரு "பூடகம்""67 என்கின்றார்.
கம்ய+னிசம் பற்றி தனது "பூடகமான" நிலையில் நின்றும், திரித்தும் வெளியிடும் கம்யூனிச எதிர்ப்பு அறிவியல் சார்ந்ததல்ல. கம்யூனிசம் தத்துவரீதியாகச் சம உரிமை கோருகின்றதாம். இதைப் பொருளாதாரத்தில் கோருகின்றதாம். எல்லா வண்ணப் பிழைப்புவாதிகளும் கம்யூனிசத்தைப் பொருளாதாரப் போராட்டமாகச் சுருக்கி, அதில் போராடிப் பிழைத்து அம்பலப்படுகின்றனர்.
பொருளாதாரத்தில் சமத்துவம், சமஉரிமை தான் போதும் எனின் தொழிற்சங்கப் போராட்டம் போதுமானதாக இருக்கும். இன்றைய தொழிற்சங்கங்கள் கம்ய+னிசப் புரட்சியில் இருந்து விலகிச் சென்ற பாதை இதுதான்.
கம்யனிசம் வர்க்கப் போரைக் கோருகின்றது. வர்க்க ஆட்சியைக் கோருகின்றது. பாட்டாளி வர்க்க ஆட்சியைப் பாதுகாக்கக் கோருகின்றது. இது வர்க்க எதிரிகளை ஒழித்துக் கட்டக் கோருகின்றது. இது தனிச் சொத்துரிமையை ஒழித்துக் காட்டுகின்றது. இதன் போராட்டப் பாதையில் சம உரிமை என்பது மறுத்து விடுகின்றது. பொருளாதாரத்தில் சமத்துவத்தை அல்ல தேவையை எடுக்கக் கோருகின்றது.
பொருளாதார வாதத்துக்கு எதிராக வர்க்கப் போராட்டத்தை நிறுவ மார்க்ஸ்-லெனின் பல நிறைய தத்துவப் போராட்டங்களை நடத்தி கம்யூனிசத்தை நிறுவினர். இதைப் "பூடகம்" போல் இல்லாது படித்து கம்ய+னிசத்தைத் திரிக்காது பார்க்காதவரை எப்போதும் கம்யூனிச எதிர்ப்புதான் அகராதியாகின்றது.
பெண்ணியத்தில் சம உரிமைக்குத் துணைநிற்கும், அதற்கு வெளியில் கம்ய+னிசம் ஒரு பூடகம் என்கிறார். இது அறிவு சூனியத்தின் குருட்டுப்பார்வை தான். பெண்ணியத்திற்குச் சம உரிமை கிடைத்தபின் எப்படி ஐயா பெண்ணியக் கோரிக்கை எழும்? சம உரிமை என்பது எல்லாத் துறையிலும் நடக்க வேண்டும்.
கம்ய+னிசம் வர்க்கப் போரைப் பொருளாதாரத்தில் நடத்துவதில்லை. அது சுரண்டலுக்கு எதிராக, அதற்குக் காரணமான அனைத்துத் துறைகளுக்கும் எதிராகப் போராடுகின்றது. சுரண்டல் என்பது உருவாக்கியது தான், ஆணாதிக்கம், சாதிக் கட்டமைப்பு, பாலியல் வக்கிரங்கள் ........ என அனைத்துமாகும். இதை எதிர்க்கும் வர்க்கப் போராட்டம் சுரண்டலை ஒழிக்கும் போது அது அனைத்துத் துறையிலும் மாற்றத்தை நிகழ்த்தியிருக்க வேண்டும். இது மட்டும் தான் கம்ய+னிசத்தின் கோரிக்கையும் வெற்றியுமாகும்.
மொழி, பண்பாடு, கலாச்சாரம், பொருளாதாரம், மதம்........ என இன்றைய அனைத்தையும் மறுத்து மாறுதலைக் கம்யூனிசம் கோருகின்றது. இதைப் புரிந்து கொண்டால் பெண்ணியத்துக்காக ஒரே ஒரு போராட்ட வடிவம் கம்ய+னிசமாக இருப்பதைக் காண முடியும். இதைவிட்ட அறிவு சூனியப் "பூடகமாக" இருப்பதால் எதுவும் நடக்காது, வம்பளப்பதும் சுகிப்பதும்தான் எஞ்சும்.
Saturday, October 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment