Saturday, October 11, 2008

ஐக்கிய நாடுகள் சபை


அமைவு:

ஐக்கிய அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா.வின் தலைமச் செயலகத்தில் 191 நாடுகள் கூடி உலகப் பிரச்சனைகளை
ஆராய்ந்து அவற்றுக்கு சுமுகமான முடிவுகளை எட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மனித உரிமைகளுக்கு உலகெங்கிலும் ஏற்படும் சவால்களைச் சமாளிக்கும் நடுவமாக ஐ.நா. சபை பணியாற்றி வருகிறது.

பணிகள்:

இப்பணியில் 30க்கும் மேற்பட்ட இணை நிறுவனங்களினை இச் சபை கொண்டு இயங்குகின்றது. இவை எல்லாவற்றினையும் சேர்து ஐ.நா. இயங்கு முறை வடிவமைக்கப் பட்டுள்ளது. ஐ.நா.வும் அதன் குடும்பத்திலுள்ள நிறுவனங்களும் சேர்ந்து நாளும் பொழுதும் மனிதஉரிமைகளைப் பாதுகாக்கவும், அதனை வளர்க்கவும், சுற்றுச் சூழலினை பாதுகாப்பதிலும், நோய்களுக்கெதிராகவும் வறுமைக்கெதிராகவும் செயற்படுவதிலும் ஈடுபட்டு வருகின்றன.

ஐ.நா. அமைப்புகள் பாதுகாப்பானதும் திறனுடையதுமாகிய வான்வழி போக்குவரத்துக்களிற்கான நியமங்களினை வடிவமைத்தும் தொலைத்தொடர்புகளை மேம்படுத்துவதில் உதவிகள் புரிந்தும், நுகர்வோர் பாதுகாப்பினை உறுத்திப்படுத்தியும் வருகின்றன. ஐக்கிய நாடுகள் சர்வதேச போதைப்பொருட் கடத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கெதிரான செயற்பாடுகளை முன்நின்று செயற்படுத்தி வருகின்றது.

உலகம் முழுவதிலும் ஐ.நா.வும் அதன் இணை நிறுவனங்களும் சேர்ந்து அகதிகளுக்கு உதவி புரிவதிலும், கண்ணி வெடிகளை அப்புறப்படுத்துவதிலும் ஈடுபடுவதோடல்லாது உணவுப் பொருள் உற்பத்திகளை வளர்ப்பதிலும் எய்ட்ஸ் நோய்கெதிரான செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவருகின்றன.

வரலாறு:

ஐக்கிய நாடுகள்” என்ற பதம் ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக 1940 களில் இருந்த பிராங்லின் டி. ரூஸ்வெல்ற் என்பவரால் முதன் முறையாக இரண்டாம் உலகப் போரின் போது, யனவரி முதலாம் திகதி 1942 ஆம் ஆண்டில் “ஐக்கிய நாடுகளின் அங்குரார்ப்பணத்தில்”வைத்து 26 சேர்ந்து தீவிரவாத சக்திகளுக்கெதிராகப் போராடும் உறுதியினை எடுத்து கொண்ட போது உபயோகிக்கப்பட்டது. எனினும் அச் சமயத்தில் ஐ.நா. ஒரு போர் கால கூட்டணியாகவே இருந்தது.

1865இல் சர்வதேச தந்தி நிறுவனம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட சர்வதேச தொலைத்தொடர்புகள் ஒன்றியமும், 1874 இல் உருவாக்கப்பட்ட தபால் ஒன்றியமும் தற்போது ஐக்கிய நாடுகளின் நிபுணத்துவ நிறுவனங்களாக இருந்து வருகின்றன.

பின்னர் ஐ.நா. வானது வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோ நகரில் வைத்து ஓர் அனைத்துலக நிறுவனமாகத் தொடங்கப்பட்டது. எனினும், 51 பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10 1946 இல், இலண்டனிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் மத்திய மண்டபத்தில் கூடியது.

1919 இலிருந்து 1946 வரை, இதற்கு முன்னோடியாகக் கொள்ளக்கூடிய, இதையொத்த League of Nations என்னும் நிறுவனம் இருந்து வந்தது.

ஐ.நா. அங்கத்தினர் தகுதி, ஐநா சாசனத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்று, அந்நிபந்தனைகளை செயல்படுத்த முடியும் என ஐநாவினால் நம்பத்தகுந்த எல்லா ”சமாதான விரும்பி” நாடுகளுக்கும் உண்டு. பாதுகாப்புச் சபையின் பரிந்துரைப்படி, பொதுச்சபை அனுமதி பற்றித் தீர்மானம் எடுக்கிறது. வருடாவருடம் ஒக்டோபர் 24ஆம் திகதியில் ஐக்கிய நாடுகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஐக்கிய நாடுகள் முறைமை:

ஐக்கிய நாடுகள் முறைமை 5 முக்கிய அமைப்புகளைக் உள்ளடக்கியது. அவையாவன:

* ஐக்கிய நாடுகள் பொதுச் சபை
* ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை
* ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை
* ஐக்கிய நாடுகள் நம்பிக்கைப் பொறுப்புச் சபை
* ஐக்கிய நாடுகள் செயலகம்
* அனைத்துலக நீதிமன்றம்

ஆதாரம்:
1. htttp://www.un.org
2. http://ta.wikipedia.org

No comments: