Thursday, October 2, 2008

சமூகப் பராமரிப்பு நிறுவன நிதி (CEF)



சமூக நிறுவனங்கள் சமூக விவகாரங்களில் கவனம் செலுத்துகின்றன. அவை சமூக மாற்றத்தை ஏற்படுத்தத் கொழிலைப் பயன்படுத்துகின்றன. வசதி குறைந்தோர் சொந்தக்காலில் நிற்பதற்கு உதவுவதற்காக, சமூக வளர்ச்சி, இளையர், விளையாட்டு அமைச்சு அதன் சமூக நிறுவன நிதியை (SEF) சமூகப் பராமரிப்பு நிறுவன நிதியாக (CEF) மாற்றியமைக்கிறது. உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்தும் தொழில் நிறுவனங்களை ஆரம்பிப்பதற்கான தொடக்க நிதியை அது வழங்கும். அந்த உதவி, வசதி குறைந்த சிங்கப்பூரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாகவோ, ஈட்டிய ஆதாயத்தில் அவர்களுக்கான திட்டங்களைச் செயற்படுத்துவதாகவோ அமையும்.

சாத்தியப்படும் தொழில் திட்டங்களுக்கு அந்த நிதி ஒதுக்கப்படும். சமூகப் பராமரிப்பு நிறுவன நிதிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனம் தான் செய்யவிருக்கும் தொழில் தாக்குப்பிடிக்கக் கூடியது என்பதையும் அது வெறும் சமூகத் திட்டம் அல்ல என்பதையும் நிரூபிக்க வேண்டும். தொழில்கள் ஈட்டும் ஆதாயம் சமூகக் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காகச் செலவிடப்பட வேண்டும்.

சமூக நிறுவன நிதி, 2 மில்லியன் வெள்ளியுடன் இந்த நிதி ஆண்டைத் தொடக்கியது. காம்கேர் மேலும் 1 மில்லியன் வெள்ளியைச் சேர்த்து, சமூகப் பராமரிப்பு நிறுவன நிதியை இந்த ஆண்டுக்கு 3 மில்லியன் வெள்ளி ஆக்கியிருக்கிறது.

சமூகப் பராமரிப்பு நிறுவன நிதிக்கு, சமூக வளர்ச்சி, இளையர், விளையாட்டு அமைச்சிடம் 2005 ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து விண்ணப்பிக்கலாம். சமூகப் பராமரிப்பு நிறுவன நிதி பற்றிய மேல் விவரங்களுக்குத் தொடர்புகொள்ளவேண்டிய இணைய முகவரி: comcare@mcys.gov.sg.

No comments: