Monday, October 13, 2008

அமெரிக்கா மீது சீறும் இலங்கை - உண்மையைக் கூறினால் பலருக்கும் பிடிப்பதில்லை. இது பொதுவான பண்பியல்புதான்.


அதுவும் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தைக் கையாள்வதில் பொய்ப்புளுகு புரட்டுப் பிரசாரத்தில் காரியங் களை நகர்த்தும் கொழும்புக்கு உண்மை வெந்தணலாகச் சுடு கின்றது. அதனால் இலங்கை இனப்பிரச்சினை பற்றிய உண் மைகளை அம்பலப்படுத்தும் தரப்புகள் மீது சீறிப் பாய்கின்றது கொழும்பு அரசு.
உண்மைகளை நிஜத்தை யதார்த்தத்தை வெளிப் படுத்தி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டும் தரப்புகள் மீது தாரதம்மி யம் பார்க்காமல் சீறி விழுகின்றது இலங்கை அரச நிர்வாகம்.


இந்த வரிசையில் இப்போது கொழும்பின் பாய்ச்சலுக்கும், ஏச்சுக்கும் இலக்காகியிருப்பது அமெரிக்கா. இலங்கை நிலைவரம் பற்றிய அமெரிக்காவின் பக்கச்சார் பற்ற அவதானிப்பு அறிக்கையே கொழும்பை கடும் சீற்றத் துக்கு ஆழ்த்தியிருக்கின்றது.


அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழில் அலுவலகப் பிரிவு உலகில் 196 நாடுக ளில் மேற்படி துறைகள் தொடர்பான தனது அவதானிப்பை சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது. அமெரிக்க வெளி விவகார அமைச்சு வருடா வருடம் மேற்கொள்ளும் வழமை யான நடவடிக்கையே இது. கடந்த ஆண்டுக்கான அவதானிப்பு அறிக்கையே சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதி லேயே கொழும்பு அரச நிர்வாகத்தின் மோசமான மனித உரிமை மீறல் போக்கை வாங்குவாங்கெனக் கீறிக் கிழித்திருக்கின்றது அமெரிக்கா.


இலங்கையில் ஈழத்தமிழருக்கு எதிராக அரச படைகளா லும், துணைப் படைக் குழுக்களாலும் கட்டவிழ்த்துவிடப்பட் டிருக்கும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இங்கு பெரும் இனப் படுகொலையாக, மனிதப் பேரவலமாக வடி வெடுத்திருக்கின்றன. இதனை தமிழர் தரப்பு மட்டுமல்ல சுயா தீனப் பார்வையாளர்கள் அனைவரும் அறிவர்.


பல்வேறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் இலங்கையில் ஈழத் தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மனிதப் பேரழிவு நடவடிக்கைகளை இனப்படுகொலை கலாசாரத்தை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்துள்ளதுடன் நிலைமை பேராபத்துக் கட்டத்தை எட்டிவிட்டது என்பது தொடர்பான அபாய எச்சரிக்கையையும் வெளியிட்டு வருகின்றன.


இப்படி உண்மையை அம்பலப்படுத்தும் அமைப்புக்க ளின் பட்டியல் சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச நெருக்கடிக்கான குழு மற்றும் ஐ.நாவின் மனித உரிமைகள் கவுன்ஸில் உட்பட பல்வேறு ஐ.நா அமைப்புகள் என்று நீண்டு செல்கின்றது.


இவ்வாறு சர்வதேச அமைப்புகள் விசேடமாக மனித உரி மைகள் விவகாரத்தைக் குறிப்பாகவும், பிரத்தியேகமாகவும் கையாளும் அமைப்புகள் புட்டுக்காட்டிய உண்மைகளையே இப்போது அமெரிக்காவும் அம்பலப்படுத்தியிருக்கின்றது. ஆனால்அமெரிக்கா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டிய விட யங்கள் இட்டுக் கட்டியவை என்று கூறுகிறது இலங்கை.


நெருப்புக் கோழி தான் நிலத்துக்குள் தன் தலையைப் புதைத்துக் கொண்டு உலகமே இருண்டு விட்டது என்று கருது மாம். அது போலவே தென்னிலங்கையும், தமிழர் தாயகத்தில் தனது படைகள் மூலமும் ஒட்டுக் குழுக்கள் மூலமும் தான் புரியும் அராஜகங்களை தனது தென்னிலங்கை ஊடகங்கள் மூலம் சிங்கள மக்களுக்கு மூடி மறைத்து ஒழித்துக் கொண்டு அதனால் முழு உலகத்துக்குமே அது தெரியாமல் போய்விட் டது என்று எண்ணிக்கொள்கின்றது.


அப்படியல்ல, நவீன தொடர்பாடல் முறை வசதிகளின் கீழ் எல்லாமே அம்பலமாகி, சர்வதேசத்துக்கும் சகல உண்மைகளும் தெரியும் என்ற யதார்த்தம் புரியும்போது அதைக் கொழும்பி னால் சீரணிக்க முடியவில்லை; சகிக்க இயலவில்லை.


அதனால்தான் உண்மைகளை அம்பலப்படுத்தும் தரப்புக் களுக்கும் எதிராகத் துள்ளிக் குதிக்கின்றது கொழும்பு. சர்வ தேச பொலிஸ்காரனான அமெரிக்காவும் இப்படி உண்மை யைப் போட்டுடைத்திருப்பதை கொழும்பால் தாங்கிக் கொள் ளவே முடியவில்லை.


அதனாலேயே அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு நாடு என்று கூடப் பார்க்காமல் அதன் கொழும்புக்கான தூதுவரை அழைப்பித்து தனது காட்டமான கண்டனத்தைத் தெரிவித் திருக்கின்றது கொழும்பு.


அமெரிக்கா அம்பலப்படுத்திய விடயங்களை "வெறுமனே செவி வழித் தகவல்கள்' என்றும் "ஆதாரமற்றவை' என்றும் "வேண்டுமென்றே பெரிது படுத்தப்பட்டவை' என்றும் "மழுப் பல் விவகாரங்கள்' என்றும் காரசாரமாக விமர்சித்திருக்கின்றது கொழும்பு. அதுமட்டுமல்ல "யுத்த களத்திலும் சர்வதேச மட் டத்திலும் தம்மை ஸ்திரப்படுத்திக் கொள்ள முடியாது தடு மாறும் புலிகள் அமைப்புக்கு அமெரிக்காவின் இந்த அறிக்கை உயிர் வாழ்வுக்கான பிராணவாயுவை அளிக்கின்றது' என்ற அளவுக்கு குறை கூறும் நிலைக்கும் கொழும்பு சென்றுள்ளது. ஆக, இந்த அறிக்கை மூலம் அமெரிக்கா புலிகளுக்கு உதவ முற்பட்டிருக்கின்றது என்று குற்றம் சுமத்தும் கட்டத்துக்கு கொழும்பின் இக்கட்டு சிக்கலாகியுள்ளது.


ஆனால் கொழும்பின் இந்தக் குற்றச்சாட்டைத் தூக்கி வீசிவிட்டது அமெரிக்கா. தனது வெளிப்படுத்தல்கள் நியா மானவை, நேர்மையான நோக்கம் கொண்டவை என இரண்டு வரிகளில் குறிப்பிட்டு இலங்கையின் குற்றச்சாட்டை அடி யோடு நிராகரித்துவிட்டது அமெரிக்கா.


அமெரிக்கா தனது அறிக்கை மூலம் சுட்டிக்காட்டிய விட யங்கள் போலியான தகவல்களையும் வெறும் பத்திரிகைச் செய்திகளையும் பின்னணியாகக் கொண்டவை என இலங்கை இந்தக் கட்டத்தில் கூறியிருக்கின்ற கருத்தும் கூட இன்றைய நிலையில் கவனிக்கத்தக்கது. ஊடகங்களுக்கு எதிரான அடக்கு முறை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள இச்சமயத்தில் அமெரிக்கா அம்பலப்படுத்திய விடயங்களுக்கு பத்திரிகைகள் மீதும் பொறுப்பைப் போடும் ஆட்சித் தரப்பின் எத்தனம், புதிய நெருக்கடிகள் குறித்து சிந்திக்கத் தூண்டுகின்றன.


தமிழர்கள் எதிர்நோக்கும் மோசமான நெருக்கடிகள் பற்றிய விடயங்களை உலகுக்கு அம்பலப்படுத்தும் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் ஏற்கனவே பலத்த சிக்கல்களை எதிர் கொண்டு வருகின்றனர்.


இந்தச் சமயத்தில் இன ரீதியாகத் தமிழர்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகள் பற்றிய நிலைமையை அமெரிக்கா அம் பலப்படுத்தியமைக்கு ஊடகங்களைப் பொறுப்பாக்கும் கொழும்பின் எத்தனம் பல செய்திகளைச் சொல்லாமல் சொல் லுகின்றது. இதனை ஊடகங்களும், ஊடகவியலாளரும் எச்ச ரிக்கை அறிவிப்பாகக் கவனத்தில் எடுப்பது முக்கியமாகும்.

No comments: